Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கறுப்புப் பணம் மோசடியை தடுக்க பா.ம.க. வலியுறுத்தல்!

அப்பாவிகளின் வங்கி கணக்கு மூலம் நடக்கும் கறுப்புப் பணம் மோசடியை தடுக்க வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி உள்ளது. 

இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் போதிய முன்னேற்பாடுகளை செய்யாமல், 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மற்றொருபுறம், அப்பாவி மக்களின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி கறுப்புப் பண முதலைகள் தங்களின் கறுப்புப்பணத்தை வெளுப்பதும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் தாள்களுக்கு பதிலாக போதிய அளவில் புதிய ரூபாய் தாள்கள் வெளியிடப்படாததால் பணப்புழக்கம் குறைந்து அனைத்து விதமான வணிகங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வணிகம் மட்டுமின்றி வாழ்வாதாரமும், வாழ்க்கையும் பறிபோய் கொண்டிருக்கிறது. 

பழைய ரூபாய் தாள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 16 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை புதிய ரூ.500 தாள் சென்னையின் சில பகுதிகளைத் தவிர தமிழகத்தின் மற்ற ஊர்களைச் சென்றடையவில்லை. இதனால் வங்கிக் கணக்கில் பணமிருந்தும் அதை பயன்படுத்த முடியாமல் தமிழக மக்கள் தவிக்கின்றனர். இதேநிலை நீடித்தால், உச்ச நீதிமன்றம் எச்சரித்தவாறு கலவரம் வெடிக்கும் ஆபத்து உள்ளது என்பதை மத்திய அரசு உணர வேண்டும். அதைத் தடுக்க தமிழகம் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் புதிய ரூ.500 தாள்கள் மற்றும் ரூ.100 தாள்களை அதிக எண்ணிக்கையில் அனுப்பி பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். வங்கிகளில் பணம் எடுக்க வரிசையில் நின்றபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன் அப்பாவி மக்களின் வங்கிக் கணக்கை தவறாகப் பயன்படுத்தி, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் கறுப்புப் பண முதலைகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close