Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஆம்... 500 ரூபாய் புழக்கத்தில் இல்லாதது தான் பிரச்னை..!' ஸ்டேட் வங்கி தலைவர் ஒப்புதல்


கோவை : "500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வராததால் தான் பிரச்னை. தற்போது 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அதிகளவில் வங்கிகளுக்கு வழங்கியுள்ளது. விரைவில் இயல்பு நிலை திரும்பும்," என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.

500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என கடந்த 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும், இதற்கு பதில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழகத்தில் விடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. முதலில் இரு நாட்களில் நிலைமை சீரடையும் என சொல்லப்பட்டிருந்த நிலையில், 3 வாரங்களாகியும் நிலைமை சீரடையவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தங்களிடம் உள்ள பணத்தை மாற்றவும், தங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்கவும் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்கள் முன்பும் கால் கடுக்க காத்திருக்கிறார்கள் பொதுமக்கள். பணமில்லாமல் வங்கி, ஏ.டி.எம். மையங்கள் பூட்டப்படும் சூழலும் நிலவுகிறது.

இது தொடர்பாக வங்கிகள் சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் ஆய்வுக்காக வந்திருந்த பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து, 15 நாட்களில் பாரத ஸ்டேட் வங்கியில் 1.20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை மாற்றப்பட்டுள்ள மொத்த பணத்தில் மூன்றில் ஒரு பங்கு ஸ்டேட் வங்கியில் மாற்றப்பட்டுள்ளது.

வங்கிகளில் 100 ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு இருப்பு உள்ளது. பொதுமக்கள் 100 ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என நினைத்து புழக்கத்தில் விடாமல் உள்ளனர். பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம். விரைவில் பிரச்னை தீரும். 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வராததால் பிரச்னையா என்கிறீர்கள். ஆம் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வராததால் தான் பிரச்னை. தற்போது 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அதிகளவில் வங்கிகளுக்கு வழங்கியுள்ளது. விரைவில் இயல்பு நிலை திரும்பும்.

60 சதவீத ஏ.டி.எம் களில் புதிய 2000,500 ரூபாய் நோட்டுக்கள் வைக்கப்பட்டுவருகிறது. மீதம் உள்ள 40 சதவீத ஏ.டி.எம் களிலில் இன்னும் வைக்கப்படவில்லை. 5 அல்லது 6 நாட்களில் இந்த பிரச்னை தீர்க்கப்படும். பணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதன் பின்னர், வாராக்கடன்களைக் கட்ட பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் வாராக்கடன்கள் அதிக அளவு வசூலாகியுள்ளது .

பாரத ஸ்டேட் வங்கி 63 தொழிலதிபர்களின் வராக்கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. அவர்களிடமிருந்து கடன்களை வசூலிக்கும் வகையில் அவர்களது வங்கி கணக்குகளை துல்லியமாக கண்காணித்து வருகிறோம்," என்றார்.

- சே.சின்னதுரை

படங்கள் : தி.விஜய்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ