Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தேர்தலில் மோகன கிருஷ்ணன் வெற்றி!

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற்றது. இந்த வழக்கறிஞர் சங்கத் தேர்தல் வாயிலாக, தலைவர், செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர், இளநிலை, மூத்த செயற்குழு உறுப்பினர்  உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கப்படவிருந்தனர். 

வழக்கறிஞர் சங்கத் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளராக இருந்த அறிவழகன், விஜயகுமார், காசி ராமலிங்கம் உள்ளிட்ட  ஏழு பேர் போட்டியிட்டனர். செயலாளார் பதவிக்கு சிவசங்கர், இளங்கோவன், கிருஷ்ணகுமார், சசிகுமார்  உள்ளிட்ட நான்கு பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில் உயர்  நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் முடிவு இன்று வெளியிடப்பட்டது. தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட வழக்கறிஞர் மோகன கிருஷ்ணன் 2,106 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தனக்கு போட்டியாக இருந்த அறிவழகனை விட 1004 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வழக்கறிஞர் அறிவழகன் 1,102 ஓட்டுகள் பெற்றார்.

 - அ.பா.சரவண குமார் (மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ