Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லோக் ஆயுக்தா அமைப்பை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்! - மு.க.ஸ்டாலின் 

லோக் ஆயுக்தா அமைப்பை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

“ஊழலை ஒழிக்க வேண்டும் என்று எந்நேரமும் ஆர்வம் காட்டுவதாக கூறும் மத்திய அரசு லோக்பால் அமைப்பை ஏன் இன்னும் ஏற்படுத்தவில்லை” என்று பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம். அதிமுக ஆட்சியில் தாண்டவமாடும் ஊழலைக் காணும் அனைத்து ஊழல் ஒழிப்பு ஆர்வலர்கள் மத்தியிலும் உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கேள்வி தமிழகத்தில் உள்ள அதிமுக அரசின் தலை மீதும் வைத்த குட்டு என்றே எண்ணப்படுகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எப்படி “லோக்பால் அமைப்பு” தேவையோ, அதே மாதிரி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு “லோக் ஆயுக்தா” அமைப்பு இன்றியமையாதது. பொது வாழ்வில் தூய்மையை நிலைநாட்டவும், அப்பழுக்கற்ற அரசு நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்கவும் உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்டனத்துக்குப் பிறகாவது “லோக்பால்” அமைப்பை உடனடியாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு அளிக்கப்பட்ட சலுகைகள் இன்றுடன் முடிவதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்த சலுகைகளை 31.3.2017 அன்று வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். லோக்பால் விஷயத்தில் மத்திய அரசுக்குத் தானே உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது என்று அலட்சியமாக இருக்காமல், தமிழகத்தில் “லோக் ஆயுக்தா” அமைப்பை உடனடியாக அதிமுக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 படம்: தி.குமரகுருபரன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ