Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் தீக்குளிக்க முயற்சி

கோவையில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் பணத்தை மாற்ற முடியாத விரக்தியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

கோவை கணபதி பகுதியைச் சார்ந்த அய்யப்பன் என்ற தனியார் வங்கி காவலாளி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் பணத்தை மாற்ற முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால், விரக்தி அடைந்த அவர், மது அருந்திவிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், "மோடி வீட்டில் ஜாலியாக இருக்கிறார். எங்களைப் போல் ஏழைகள் தான் கஷ்டப்படுகிறோம். கலெக்டர் பெட்டி பெட்டியாக வங்கியில் கருப்பு பணத்தை மாற்றுகிறார். என்பாடுதான் கடும் திண்டாட்டமாக இருக்கிறது" என்று கூச்சலிட்டபடியே, தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

- சே.சின்னத்துரை 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ