Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாரதியார், மனோன்மணியம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல்: சிபிஐ விசாரிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

பாரதியார், மனோன்மணியம் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த ஊழல் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகமே அழிந்தாலும் ஊழல் செய்வதை மட்டும் நிறுத்துவதில்லை என்பதில் தமிழக ஆட்சியாளர்களும், அவர்களின் முகவர்களும் உறுதியாக உள்ளனர் என்பதையே தமிழ்நாட்டு நிகழ்வுகள் காட்டுகின்றன.  கோவை பாரதியார் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் நியமனத்தில் நடக்கும் முறைகேட்டைத் தடுக்க வேண்டும் என குரல் எழுப்பிய போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் நியமனத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருக்கிறது. 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனம் தொடர்பாகவும் துணை வேந்தர், உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோரிடையே எழுதப்படாத ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவின் எதிர்காலத்தூண்களை உருவாக்கும் பேராசிரியர்கள் நியமனத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் நடப்பதாகவும், அதை தடுத்து நிறுத்தும்படியும் எச்சரிக்கை விடுத்த பிறகும் ஊழலை ஒழிக்காமல், ஊழல் பணத்தை பகிர்ந்து கொள்வதற்காக ஒப்பந்தம் செய்து கொள்வதை பார்க்கும்போது அரசு நிர்வாகத்தில் ஊழலைத் தவிர வேறு ஒன்றுமே நடக்கவில்லை என்று தான் தோன்றுகிறது.

அதிலும் குறிப்பாக உயர்கல்வித்துறையை உயர் ஊழல் துறை என அழைக்கும் அளவுக்கு ஊழல் மலிந்து கிடக்கிறது. இது உயர்கல்வியை வளர்க்காது; மாறாக, சீரழித்து விடும். எனவே, இந்த பிரச்னையில் தமிழக ஆளுநர் உடனடியாக தலையிட்டு 2 பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் நியமனங்களையும் ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close