Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருச்சி என்.ஐ.டி.க்கு முதல் பெண் இயக்குநர்

திருச்சி என்.ஐ.டி-யின் முதல் பெண் இயக்குநராக மினி ஷாஜி தாமஸ் நியமிக்கப்பட உள்ளார். இவர் தற்போது ஜாமியா மிலியா இஸ்லாமியா (JMI) பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் மையத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2003-ம் ஆண்டு, திருச்சி பொறியியல் கல்லூரி, நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை பெற்றதில் இருந்து, இதுவரை பெண் இயக்குநர்கள் நியமிக்கப்பட்டதில்லை. ஸ்ரீனிவாசன் சுந்தர்ராஜன், இயக்குநர் பதவியில் இருந்து ஓய்வுப் பெற்றதைத் தொடர்ந்து 5 மாதங்களாக அப்பணியிடம் காலியாக இருந்தது. தற்போது மினி தாமஸ் இயக்குநராக நியமிக்கப்பட உள்ளார் என பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிகாரபூர்வ அறிவிப்பு வந்ததும், திருச்சி என்.ஐ.டி-யை ஆளும் முதல் பெண் என்னும் பெருமை மினி தாமஸை சேரும்!

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ