Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“இதை பணத்தினால் மட்டுமே கிடைத்த வெற்றி என்று சொல்லமுடியாது!” வேல்முருகன்

 வேல்முருகன்

“தமிழ்நாட்டில் தமிழ் சார்ந்த பிரச்னைகளிலும், கெய்ல் முதல் மீத்தேன் வரை பல்வேறு போராட்டங்களிலும் களம் கண்டுவருபவர் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன். சமகால அரசியல் களத்தில் தமிழர் பிரச்னைக்காக எந்த சமரசத்தையும் மேற்கொள்ளாத இவர், திரையுலகிலும் தமிழருக்கு எதிரான கருத்துகளை எதிர்த்து வந்தவர். 

2014-ம் ஆண்டு தமிழகத்தின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்-யின் 'கத்தி' திரைப்படத்திற்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினார். கத்தி படத்தை வாழ்வுரிமைக் கட்சி ஏன் எதிர்க்க வேண்டும்? என்ற கேள்விக்கு, “கத்தி' படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்ட ராஜபக்சே-வின் நெருங்கிய நண்பர். அவர் தமிழகத்தில் படம் எடுப்பதை அனுமதிக்க முடியாது” என்று ஆர்ப்பாட்டம் நடத்தி அந்த படக் குழுவையே திண்டாட வைத்தார். இப்போதும் தொடர்ச்சியாக நெய்வேலி பிரச்னையில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தி. வேல்முருகனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

மூன்று தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றி பணத்தினால் கிடைத்த வெற்றி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறார்களே?

அப்படி சொல்லமுடியாது. அ.தி.மு.க ஆளும் கட்சியாக உள்ளது. கடந்த முறை ஆட்சியில் இருந்து பல திட்டங்களை செய்துள்ளது. மக்களின் மனநிலை இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் தொகுதிக்கு ஏதாவது திட்டங்கள் வரும், எதிர்க்கட்சிக்கு வாக்களித்து என்ன ஆகப்போகிறது என்ற எண்ணம் ஏற்படும். அது மிகப்பெரிய காரணம். அதைத் தாண்டி பணமும் சிறு காரணியாக இருந்து இருக்கலாம். 


மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற  அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

மோடியின் அறிவிப்பு கறுப்புப் பண ஒழிப்பிற்கான அறிவிப்பு என்றாலும், சாமான்ய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் இந்த அறிவிப்புக்கு முன், அதற்கான திட்டமிடல்களை கையாண்டு இருக்க வேண்டும். குறிப்பாக ஐநுாறு,ஆயிரம் ரூபாய்தான் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கிறது என்றால், அந்த அளவிற்கு புதிய ரூபாய் நோட்டுகளை அடித்திருக்கலாம். அல்லது, ஐநுாறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புதிய வடிவில் அடித்து வைத்துக் கொண்டு, பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து இருந்தால் இந்த பணத்தட்டுப்பாடும்,வங்கி வாயிலில் பொதுமக்கள் காத்திருக்கும் அவலமும் தவிர்க்கப்பட்டு இருக்கும். அதை மோடி செய்யாதது தான் இந்த விமர்ச்சனத்திற்கு காரணமாகி விட்டது. 


லைக்காவின் கத்தி படத்தை எதிர்த்த நீங்கள் அதே நிறுவனத்தின் 2.0 படத்தை கண்டுகொள்ளாமல் இருக்கின்றீர்களே?

கண்டுகொள்ளாமல் இல்லை. லைக்கா நிறுவனம் நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கியுள்ளது.அதனால்தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். தமிழர், நலனை முன்வைத்து நீதித்துறை எந்த தீர்ப்பையும் அளிப்பதில்லை. எனவே நாங்கள் போராட முடியாமல் இருக்கிறோம். இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு முன்பே பல தமிழ்ப்படங்களை அந்த நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவால் நாங்கள் அதை வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது. 

நளினியின் புத்தகத்தை பற்றி சொல்லுங்களேன்?

இன்னும் முழுமையாக நான் அதை படித்து முடிக்கவில்லை. வேதனைகளும் வலிகளும் நிறைந்த பக்கங்களாக அந்த புத்தகம் உள்ளது என்பதை மட்டும் என்னால் உணர முடிகிறது. 

அ.சையது அபுதாஹிர்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ