Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குரூப்-III, குரூப்-IV தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

29 செயல் அலுவலர் நிலை-III, 49 செயல் அலுவலர் நிலை- IV பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. செயல் அலுவலர் நிலை -III பணியிடங்களுக்கு ஏப்ரல் 29-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலிலும், செயல் அலுவலர் நிலை - IV பணியிடங்களுக்கு ஏப்ரல் 30-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலிலும் தேர்வு நடக்கிறது.

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க டிசம்பர் 24-ம் தேதி கடைசி தேதி என்று தெரிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி, இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர்  தனித் தனியாக தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம் என்று கூறியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ