Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.3 ஆயிரம் கோடி அரசு ஆலையை மீட்ட வழக்கறிஞர்!  -முடிவுக்கு வந்த சட்டப் போராட்டம் 

லங்குளம் அரசு ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது மதுரை உயர் நீதிமன்றம். ' ஆலை நஷ்டத்தில் இயங்குவதால் நடத்த முடியவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்த அ.தி.மு.க அரசு, சட்டப் போராட்டத்தின் விளைவாக பின்வாங்கியுள்ளது' என அதிர வைக்கிறார் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். 

விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று 1969-ம் ஆண்டு சிமென்ட் ஆலை ஒன்று தொடங்கப்பட்டது. ஏறத்தாழ ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆலை அமைந்தது ஒருபுறம் இருந்தாலும், சுண்ணாம்பு விளைந்த அந்த மண் சிமென்ட் ஆலையை வெற்றிகரமாக நடத்த உதவியது. அரசுக்கும் நல்ல வருவாய் கிடைத்து வந்தது. தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்த காலகட்டத்திலும், ஆலையை தனியாருக்கு விற்கும் முயற்சி நடந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடுத்து நிறுத்தினார் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இதன்பின்னர், கடந்த அ.தி.மு.க ஆட்சியிலும் ஆலங்குளம் ஆலையை விற்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

அரசின் நடவடிக்கைக்கு எதிராக மதுரை, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ராதாகிருஷ்ணன். அவர் தாக்கல் செய்த மனுவில், ' அரசு சிமென்ட் ஆலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நல்ல லாபத்தில் இயங்கி வந்தது. இதனால், இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் வேலைவாய்ப்பைப் பெற்றனர். தற்போது, ஆலையை மூடிவிட்டு, அதன் சொத்துக்களை தனியாருக்கு விற்கவும் அரசு முடிவு செய்துள்ளது. மீண்டும் ஆலையை இயங்கச் செய்து, தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த உத்தரவிட வேண்டும். ஆலையின் சொத்துக்களை விற்பதற்குத் தடை விதிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டார். இதற்குப் பதில் அளித்த தமிழ்நாடு சிமென்ட் கழகம் மேலாண்மை இயக்குநர் காமராஜ், ' ஆலங்குளம் சிமென்ட் ஆலையில் தினமும் 1,200 மெட்ரிக் டன் சிமென்ட் உற்பத்தி நடைபெறுகிறது. இந்த ஆலையால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1,700 பேர் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர். இதனை விற்கும் முடிவில் அரசு இல்லை' எனத் தெரிவித்தார். இதையடுத்து, ' வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை' என்று கூறி, வழக்கை முடித்து வைத்தனர் நீதிபதிகள். 

தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். " நீண்டகாலமாக நடத்தப்பட்டு வந்த சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கிறேன். விருதுநகரில் தனியார் சிமென்ட் ஆலை ஒன்றும் இயங்கி வருகிறது. ஆனால், ஆலங்குளம் ஆலையைச் சுற்றிலும் சுண்ணாம்பு வளம் இருக்கிறது. ஆலையின் மொத்தப் பரப்பளவு ஆயிரம் ஏக்கரைத் தாண்டும். இதன் மதிப்பே மூன்றாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வரும். இதனை தனியாருக்கு விற்பதுதான் அ.தி.மு.க அரசின் நோக்கமாக இருந்தது. ஆலையை விற்பதற்கு எதிராக, 83-ம் ஆண்டு நடத்தப்பட்ட சட்டப் போராட்டத்தின் முடிவில், எம்.ஜி.ஆர் அரசு பின்வாங்கியது. அதன்பின்னர், ஆலையில் இருந்து வெளியேறும் புகை போக்கிக் குழாய்களில் சரியான பராமரிப்புப் பணிகளைச் செய்யாததால், சுற்று வட்டாரத்தில் மிளகாய், பருத்தி விவசாயத்தில் ஈடுபட்ட வந்த விவசாயிகளுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. தொழிற்சாலைக்குள் சுத்தகரிப்பு பிளான்ட் உள்பட எந்த வசதிகளும் செய்யப்படவில்லை. 

ஒருகட்டத்தில், ' தொழிற்சாலையால் அதிகப்படியான நஷ்டம் ஏற்படுகிறது' என்றுகூறி, தொழில்துறை சார்பில் விற்பதற்கான முயற்சிகள் நடந்தன. இதை எதிர்த்து தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் இறங்கின. இதுதொடர்பாக, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் புகழேந்தி, ' சிமென்ட் ஆலை நஷ்டத்தில் இயங்குகிறது. ஆலையை மேற்கொண்டு நடத்துவது இயலாத காரியம்' என நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆலங்குளம் மக்களும் தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஒருகட்டத்தில், தமிழக அரசு விற்பதற்கான முயற்சிகளில் இருந்து பின்வாங்கியது. அரசின் நடவடிக்கைக்கு எதிராக சட்டரீதியாக போராடினோம். ஆலை மீட்புக்காக இரண்டு கட்டங்களாக நடந்து வந்த போராட்டம், 2016-ல் இறுதிக் கட்ட வெற்றியைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி" என்றார் நெகிழ்ச்சியோடு. 

 - ஆ.விஜயானந்த் 
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ