Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த பா.ம.க. வலியுறுத்தல்!

மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தி தேர்வு முறையை மேம்படுத்த வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கல்வித்தரம், எந்த மதிப்பீட்டின் அடிப்படையில் பார்த்தாலும், மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது. தேசிய அளவில் நடத்தப்படும் எந்த நுழைவுத்தேர்வாக இருந்தாலும், போட்டித் தேர்வாக இருந்தாலும் அதன் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தில் இருப்பது தமிழகம் தான் என்பதே இதற்கு சாட்சியாகும். தமிழ்நாட்டின் இந்த நிலைமை கவலையளிப்பதாகவுள்ளது. அறிவியலும், தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், அதற்கேற்ப மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படாததன் விளைவாக கல்வித்தரம் குறைந்து வருகிறது. 

இதேநிலை நீடித்தால் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளிலோ, போட்டித் தேர்வுகளிலோ தமிழக மாணவர்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். ஒருபுறம் மருத்துவப்படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிவரும் தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர், இன்னொருபுறம் பாடத்திட்டங்கள் இப்போதைக்கு மாற்றப்படாது என்று கூறுகிறார். இது கல்வித்தரம் மேலும் சீரழியவே வழிவகுக்கும். அத்தகைய சீரழிவிலிருந்து மாணவர்களை பாதுகாக்கவும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு கல்வித்தரத்தை மேம்படுத்தவும் வசதியாக மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்திற்கு இணையாக தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தையும்,  தேர்வு மதிப்பீட்டு முறையையும் மாற்றியமைக்க வேண்டும்; இந்த பணியை மேற்கொள்வதற்காக கல்வித்துறை வல்லுனர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close