Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேர்ச்சி விகிதம் சராசரியைவிட குறைவு...நெருக்கடியில் தமிழகப் பள்ளிகள்!

பள்ளிகள்

For illustrative purpose only

ண்டு தோறும் வெளியாகும் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்த்தால் தமிழகத்தில் கல்வியின் தரம் பலமடங்கு உயந்துவிட்டது போல தோன்றும். கடந்த 2010 முதல் 2016 வரை தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவர்களின் தேர்ச்சி, 85-95 சதவிகிதமாக உயர்ந்து உள்ளது. அதே காலக்கட்டத்தில் 12-ம் வகுப்பின் தேர்ச்சி , 85-91 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்த சதவிகித கணக்குகளை வைத்துப் பார்க்கும் போது, தமிழகத்தில் மாணவர்களின் தேர்ச்சியும் திறனும் உயந்துள்ளது, தமிழகப் பள்ளிகள் தரம் கூடியுள்ளது என்று நீங்கள் நினைத்தால்  உங்கள் கணிப்புத் தவறாகக்கூடும்.

 தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT)  நடத்திய ஆய்வுகளின் முடிவுகளைப் பார்த்தால், பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைக்கின்றன. மாணவர்களின்  பாடல் கற்றல் திறன் பற்றி ஆராய்வதற்காக, மூன்று வருடத்திற்கு ஒரு முறை 3-ம், 5-ம், 8-ம் மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வு நடத்துகிறது. 2015-ல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு NCERT நடத்திய தேர்வின் முடிவுகளில், தமிழக மாணவர்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர்.

தமிழக மாணவர்களில் சராசரி செயல்திறன், தமிழ் (இந்திய மொழி), ஆங்கிலம்,  கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்து ஐந்து பாடங்களில் தேசிய சராசரியை விட கணிசமாகக் குறைவாக இருந்தது. அங்கில பாடத்தில் தமிழக மாணவர்கள் இந்திய அளவில் 27-வது இடத்திலும், கணக்குப் பாடத்தில் 25-வது இடத்திலும், அறிவியல் பாடத்தில் 21-வது இடத்திலும், சமூக அறிவியல் பாடத்தில் 28-வது இடத்திலிலும், இந்திய மொழி பாடத்தில் 23-வது இடத்திலும் உள்ளனர்.

இதற்கு என்ன காரணம்? இது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்,''இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் மாணவர்களுக்குச் சமமான கற்றல் சூழலை இங்கு உருவாக்கவில்லை. கற்றல் சூழலே இல்லாத நிலையில், மாணவர்கள் சரியகப் படிக்கவில்லை என எப்படிக் கூற முடியும். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குக் கற்றல், கற்பித்தல் தவிர மற்ற அலுவல் பணிகள், தேர்தல் பணிகள் என எல்லாவற்றையும் தருகிறார்கள். ஏதேனும் அரசுப் பள்ளிகள் தூய்மையாக இருந்து பார்த்திருக்கிறோமா? தூய்மை இந்தியா திட்டத்தை முதலில் அரசு பள்ளிகளில் இருந்துதான் தொடங்க வேண்டும். தனியார் பள்ளிகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆசிரியர்களும், மாணவர்களும் இயந்திரங்கள் போல நடத்தப் படுகிறார்கள். 

For illustrative purpose only

30 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகள் பற்றி, மாணவ- மாணவிகளில் கற்றல் திறன் பற்றி PISA என்ற ஆய்வறிக்கை வந்தது. அதில் கடைசி இடத்தில் போர்ச்சுக்கல் நாடும், அதற்கு முன்பு பின்லாந்தும் இருந்தது. இதிலிருந்து பாடம் கற்ற பின்லாந்து அரசு, அனைவருக்கும் கட்டணமில்லா இலவசக் கல்வியை வழங்கியது. தற்போது பின்லாந்தில் ஒரே ஒரு தனியார்பள்ளிகள் கூட இல்லை. அனைத்து மாணவ- மாணவிகளும் அங்கு சமமான பாடம் படிக்கிறார்கள். இந்தப் பாடத்தை இந்தியா கற்க மறுப்பது ஏன்? அருகாமை பள்ளிகள் கொண்ட தாய்மொழி கல்வியால் தான் இந்தியாவில் கல்வித்தரம் உயரும்.'' என்றார்.

அரசுகள் முதலில் இதை கவனித்தில் கொள்ள வேண்டும்..

-ஆ.நந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்