Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கழிப்பறை கட்டாவிட்டால் கோர்ட் அவமதிப்பு வழக்கு!

தமிழகத்தில் 5,720 அரசுப்பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாததை சுட்டிக்காட்டி ஆனந்த்ராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள், வக்கீல், கமிஷனர்களை நியமித்து பல மாவட்டங்களில் ஆய்வு செய்தது. அவர்கள் தந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு தரப்பிடம் விளக்கம் கேட்டது.

அரசு தரப்பின் விளக்கத்தை பெற்றுக்கொண்ட நீதிபதிகள், பெண்கள் மற்றும் இருபாலர் பள்ளிகளில் 2017-2018 கல்வி ஆண்டிலும், 2018-2019 கல்வி ஆண்டில் ஆண்கள் பள்ளியிலும் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட வேண்டுமென்றும், இதை பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும் என்றும், இதை செயல்படுத்த தவறினால், சி.இ.ஓ, டி.இ.ஓ மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படுமென்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

- செ. சல்மான்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ