Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதனுக்கு இலங்கையிலிருந்து 'ஹலோ' சொன்ன பெண்! 

 

 மதனுக்கு இலங்கையிலிருந்து வந்த போன் அழைப்பை  டிரெஸ் செய்த போது போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில் பேசிய பெண் மூலமே மதன், இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டார். 

 வேந்தர் மூவிஸ் மதனைக் கடந்த 21ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திருப்பூரில் கைது செய்தனர். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன. 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,  வேந்தர் மூவிஸ் மதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், மதனை கைது செய்ய எங்களுக்கு துருப்பு சீட்டாக இருந்த சென்னையை சேர்ந்த கீதாஞ்சலி  என்ற பெண் குறித்த முழு விவரங்களும் கிடைத்துள்ளன. அதாவது, மதன் தலைமறைவாக இருந்தபோது,  கீதாஞ்சலி,  இலங்கை சென்றுள்ளார். அங்கு ஒரு செல்போன் சிம் கார்டை வாங்கிக் கொண்டு சென்னை வந்துள்ளார். இந்த சிம் கார்டு மூலம்தான் வாட்ஸ் அப் காலில் மதனிடம் அவர் பேசியுள்ளார். கீதாஞ்சலி குறித்த தகவல்கள் எங்களுக்கு கிடைத்ததும் அவரது செல்போன் சிக்னலை கண்காணித்தோம். அப்போது அந்த சிம் கார்டின் முகவரி இலங்கையை காட்டியது. இதனால் இலங்கையிலிருந்து மதனுக்கு யார் உதவுகிறார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. 


 அதே நேரத்தில் செல்போன் சிக்னல் சென்னையை காட்டியது. அந்த செல்போன் சிக்னல் மூலம் சிக்கியவர் கீதாஞ்சலி. மதன் தரப்பினர்   போலீஸை திசை திருப்ப அவர்கள் செய்த தில்லாலங்கடி வேலை என்று அப்போதுதான் தெரிந்தது. இதையடுத்து கீதாஞ்சலி குறித்த தகவல்களை சேகரித்ததோடு அவரை கண்காணித்து மதன் இருப்பிடத்தை கண்டறிந்து கைது செய்தோம்.  மாணவர் சேர்க்கைக்கு வசூலித்த பணம் எங்கே என்பது தொடர்பாகவே மதனிடம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதற்கு அவர், அளிக்கும் பதில்கள் எங்களது விசாரணைக்கு திருப்திகரமாக இருக்கிறது. 


 மதனின் உடல்நலம் 48 மணி நேரத்துக்கு ஒரு முறை டாக்டர்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் தினமும் அவரது வழக்கறிஞரையும் மதன் சந்தித்து வருகிறார். வழக்கறிஞரிடம் எந்தவித தயக்கமின்றி சாதரரணமாக பேசுகிறார். 
 இந்த வழக்கு தொடர்பாக மதன் அளிக்கும் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் சமர்பிப்போம். ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி இருக்கும் மதனின் கூட்டாளிகள், இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள்  மற்றும் எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தில் தலைவர் பச்சமுத்து ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை அடிப்படையில் சில கேள்விகளை மதனிடம் கேட்க முடிவு செய்துள்ளோம். அதற்கு மதன், அளிக்கும் பதில், இந்த முக்கிய திருப்பமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

 எஸ்.மகேஷ் 
    

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close