Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புலிவலம் காவலர் எழுதிய தற்கொலை கடிதம்

 

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த புலிவலம் காவல் நிலையத்தில் பணிபுரிபவர் ஈஸ்வரன். மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் டிரைவராக, பணியாற்றி வரும் இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், தனக்கு ஓய்வு அளிக்காமல், தொடர்ந்து வேலை கொடுத்ததாகவும், இதனால் ஈஸ்வரன், 'மன உளைச்சல் அதிகமாக உள்ளதால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். என் சாவுக்கு இன்ஸ்பெக்டரே காரணம் என கடிதம் எழுதி, காவல்நிலையத்தில் கொடுத்துவிட்டு போக, சக போலீஸார் அதிர்ந்துபோனார்கள்.

தகவலறிந்த திருச்சி எஸ்.பி செந்தில்குமார் உள்ளிட்ட உயரதிகாரிகள், ஈஸ்வரனை நேரில் அழைத்து, விசாரணை நடத்தினர். இதனையடுத்து, ஈஸ்வரன், டிரைவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, புலிவலம் காவல்நிலையத்துக்கே அனுப்பப்பட்டுள்ளார். அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்படுவார் என்கிறார்கள்.

- சி.ய.ஆனந்தகுமார். படம்: தே.தீட்ஷித்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close