Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

நேர்காணல் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவர்களை பணி நியமனம் செய்வதை உடனடியாகக் கைவிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மருத்துவர்களை பணிநியமனம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது என்பதற்காகத்தான், மருத்துவ பணி நியமன வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகும், மருத்துவர்களை பணிநியமனம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கு இவ்வமைப்பின் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டிருப்பதே காரணம்.

இதற்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும். அதை விடுத்து, மருத்துவர்களை நேரடியாக நேர்காணல் மூலம் பணிநியமனம் செய்வது சரியல்ல. அதுவும், முதுநிலை மருத்துவம் இறுதியாண்டு படிக்கும் அரசு மருத்துவர்களுக்கு , மீண்டும் பணி இடங்களை ஒதுக்குவதற்கு முன்பாக, நேர்காணல் மூலம் மருத்துவர்களை பணி நியமனம் செய்வது அரசு மருத்துவர்களை பாதிக்கும். முதுநிலை மருத்துவம் படிக்கும் அவர்களுக்கு விருப்பமான இடங்களில் பணிநியமனம் பெறுவதை இயலாமல் செய்துவிடும். எனவே, மருத்துவர்களை நேர்காணல் மூலம் பணிநியமனம் செய்வதை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். எம்.ஆர்.பி தேர்வுகள் மூலம் மருத்துவர்களை பணிநியமனம் செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது" என்று அவர் கூறி உள்ளார்.


 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close