Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கறுப்புப் பண நடவடிக்கையில் தமிழகத்தின் மனநிலை என்ன? நாளைய ஜூவியில்

 

கறுப்புப் பணத்தை ஒழிக்க ‘500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்று பிரதமர் மோடி நடத்திய மேஜிக், இந்தியாவில் அதிர்வலைகளை உண்டாக்கிவிட்டது. செல்லாத நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்குப் படையெடுத்தனர். ஏ.டி.எம். இயந்திரங்கள் எல்லாம் கோயில்கள் ஆகின. அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைப் போல இந்தியா காட்சி அளித்தது. அன்றாட வாழ்க்கையை நகர்த்த சராசரி மனிதன் சிரமத்துக்கு ஆளானான். திருமணம். மருத்துவ செலவுகளுக்கு அல்லாடினார்கள் மக்கள். மோடி மேஜிக் என பி.ஜே.பி.யினர் கொண்டாடினாலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். ஏன் உயிரிழப்புகள்கூட ஏற்பட்டன. ‘50 நாட்களில் எல்லாம் சரியாகிவிடும். சிரமத்தை மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்’ என்றார் பிரதமர் மோடி. ‘எங்கள் பணத்தை எடுக்க ஏன் இவ்வளவு தடைகள்’ என வங்கிகளில் கொந்தளித்தார்கள் மக்கள். 


 

கறுப்புப் பண நடவடிக்கையில் தமிழகத்தின் மனநிலை என்ன? அறிந்துகொள்ள களமிறங்கியது ஜூ.வி! மாணவப் பத்திரிகையாளர்களோடு விகடன் செய்தியாளர்களும் போட்டோகிராபர்களும் சேர்ந்து 110 பேர்கள் களமிறங்கினார்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல தரப்பட்ட மக்களைச் சந்தித்தது ஜூ.வி டீம். மொத்தம் 14,701 பேர்களை சந்தித்து எடுக்கப்பட்ட சர்வேயில் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு முதல், ‘பி.ஜே.பி-க்கு வாக்களிப்பீர்களா?’ என்கிற கேள்வி வரையில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி 10 கேள்விகள் தயாரிக்கப்பட்டன. இதன் ஆச்சரிய முடிவுகள் வரும் ஜூ.வி. இதழில் இடம்பெறுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ