Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடிகர் விஷால் நீக்கம் விவகாரம்: தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நோட்டீஸ்!

நடிகர் விஷால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். இதை எதிர்த்து விஷால் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தலைமையிலான அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக விளக்கம் அளிக்க தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்  நீதிமன்றத்தில், தயாரிப்பாளர்கள் சங்கம், கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ