Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த டிசம்பரில் பெருமழை வருமா...?

மழை

டகிழக்குப் பருவமழை டிசம்பர் 1-ம் தேதி முதல் தீவிரம் அடையும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டைப் போல சென்னையை புரட்டிபோடும் மழையாக இருக்கும் என வாட்ஸ்அப்புகளில் தகவல்கள் பரப்பப்படுகின்றன. அதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது.  

மழை காலம்

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழையால் வழக்கமாக 31 செ.மீ மழை பெய்யும். ஆனால் இந்த முறை 25 செ.மீ பெய்துள்ளது. அதாவது 6 சதவிகிதம் குறைவாகப் பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை மூலமாகத்தான் தமிழகத்துக்கு 60 சதவிகிதம் மழை கிடைக்கிறது. வடக்கிழக்குப் பருவமழை காலத்தில் கடந்த ஆண்டு தமிழகத்தில் 152 சதவிகிதம் மழை பெய்தது.

மழையில்லாத நவம்பர்

இந்த வருடம் கடந்த அக்டோபர் 30-ம் தேதிதான் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது. வழக்கமாக வடகிழக்குப்பருவமழை என்பது அக்டோபர் 21-ம் தேதி தொடங்கும். இந்த வருடம் 9 நாட்கள் தாமதமாகத்தான் வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கிறது. ஆனால், வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் இது வரை பெரிய அளவில் இல்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், நவம்பர் மாதம் கனமழை பெய்யவில்லை.

பொதுவாக வடகிழக்குப் பருவமழை காலங்களில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கிழக்கு பகுதியில்  காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி மேற்கு நோக்கி நகர்ந்து அது மழையைத் தருவதாக இருக்கும். அதே போல மேற்கு பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி அதுவும் போதுமான அளவுக்கு மழையைத் தரும்.  இப்போது  வங்கக் கடலில் சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை  தெற்கு பகுதியில் மிகவும் கீழே உருவாகி அது அப்படியே நகர்ந்து விட்டது. இதனால் தமிழகத்துக்கு மழை கிடைக்காமல் போய்விட்டது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியபோது உருவான ரொனோன் புயல், காற்றில் இருந்த ஈரப்பதத்தை எடுத்துக் கொண்டு போய்விட்டது. இது தவிர  மேற்கு திசை காற்று என்று சொல்லப்படும் மித வெப்ப மண்டலத்தில் இருந்து வரும் மேலைக் காற்று கீழே வந்ததால் மழையின் தாக்கம் குறைந்து விட்டது.

மழை

லா நினோ காரணமா?

இது தவிர முக்கியமான ஒன்று. பசிபிக் பெரும் கடலில் சில நாட்கள் முன்பு லா நினோ உருவாகி உள்ளது. லா நினோ என்பது எல் நினோவுக்கு எதிரான ஒன்று. எல் நினோ என்பது  கனமழையைக் கொண்டு வரும். லா நினோ என்பது அதற்கு எதிரான செயலைச் செய்யும். இது கடல் பகுதியில் உருவானால் மழை குறையும். பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதன் காரணமாகத்தான் நமது வங்க கடலிலும் பாதிப்பு ஏற்பட்டது.  லா நினோவின் தாக்கம் இருப்பதால்தான் பனியின் தாக்கம் அதிகம் இருக்கிறது.

நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை

இப்போது தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது.  அடுத்த ஒரு நாளில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறக் கூடும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இப்போதைக்கு இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் இருந்து தூரத்தில் இருந்தாலும் கூட இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி வரும் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிசம்பர் 1 முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் நிச்சயம் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

கடந்த ஆண்டைப் போல இருக்குமா?

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்ததால்தான் கனமழை பெய்தது. கடந்த ஆண்டு நவம்பர் பெய்த மழையின் காரணமாகத்தான்  நீர் நிலைகள் நிரம்பியிருந்தன. பின்னர் டிசம்பர் மாதமும் மழை பெய்ததால்தான், ஏற்கெனவே நிரம்பியிருந்த நீர்நிலைகள் மீண்டும் பெய்த மழைக்குத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனவே இந்த முறை இனிமேல் மழை பெய்தாலும், நீர் நிலைகள் அதை எதிர்கொள்ளும் அளவுக்கு காலியாக உள்ளன. எனவே கடந்த ஆண்டைப்போல பாதிப்புகள் இருக்காது என்றே கூறப்படுகிறது.

- கே.பாலசுப்பிரமணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close