Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மூன்று எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு!

புதிய எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேரும் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, செந்தில்பாலாஜி, ஏ.கே.போஸ் ஆகிய மூன்று பேரும், இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபால் மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்று புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றதன் மூலம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது. பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் இலாகாக்களைக் கவனிக்கும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படங்கள்: ஆ.முத்துக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ