Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'விவசாய கூலி கொடுக்க துட்டு இல்ல!' - சில்லறை மாற்ற ரிசர்வ் வங்கி வந்த விவசாயி

             விவசாயி

நாடு முழுக்க பணத்தட்டுப்பாடு அனைத்துத் தரப்பினருக்கும் ஆட்டம் கொடுத்துள்ள நிலையில், ரூபாய் பிரச்னை தமிழகத்தில் விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. சிறுவிவசாயிகள் தொடங்கி பெரிய அளவில் பண்ணை விவசாயம் நடத்துபவர்கள் வரை,கூலி வேலைசெய்யும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நாள் தோறும் கொடுக்கும் கூலி கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.

பிரதமர் அறிவிப்பின்படி வங்கிகளில் ரூபாய் மாற்ற காலக்கெடு முடிவடைந்த நிலையில், தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள விவசாயிகள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு சில்லறை வாங்கிச் செல்கினறனர்.

அவர்களில் ஒருவரான விவசாயி விஜயகுமார் நம்மிடம் பேசினார். நீண்ட பயணத்தின் களைப்பும் நெடுநேரம் வரிசையில் காத்திருக்கும் அவதியும் அவரின் வார்த்தைகளில் வெளிப்பட்டது. "திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வருகிறேன் சார்.

                        

எங்க கிராமம் குக்கிராமம்.விவசாயம் மட்டும்தான் முழுநேர தொழில். கடந்த 20 நாளாக எங்க வயலில் வேலை செய்யும் விவசாயிகளுக்குக் கூலி கொடுக்கமுடியவில்லை.காரணம் சில்லறை தட்டுப்பாடு. பிரதமர் 500,1000 ரூபாய் செல்லாது அறிவித்த காரணத்தால் எங்கள் கிராமம் அருகில் உள்ள வங்கிகளை கூட்டம் அதிகமிருந்தது. அதே நேரத்தில் சில நாட்களிலேயே அங்குப் பணமும் தீர்ந்துவிட்டது.இதனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து சில்லறை மாற்ற  முடியவில்லை.

அதே போல போன 24ம் தேதியோடு பண மாற்றமும் முடிந்தது.இதனால் வயல் வேலையை விட்டுவிட்டு அருகில் 20,30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சேத்துப்பட்டு,செஞ்சி சென்று ரூபாய் மாற்ற வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. நேற்று அங்குள்ள வங்கிகளுக்கும் சென்றேன்.பணம் இல்லை என்று கூறிவிட்டனர்.இதனால் நானும் இன்னும் சிலரும் சென்னை வந்து ரிசர்வ் வங்கியில் சில்லறை மாற்றிச் செல்கிறோம்.தினமும் இதுபோல திருவண்ணாமலை அருகில் இருந்து சென்னை வந்துதான் பணம் மாற்றிச் சொல்லணும் என்றால் எப்படி விவசாயம் நடக்கும் என்று தெரியவில்லை. 

                        

வயலில் விவசாய வேலைகள் எல்லாம் அப்படியே பாதியில் நிற்கின்றன.இது பொருட்கள் வாங்கவும் வழியின்றி நிற்கிறோம்." என்றார் வேதனை கொப்பளிக்க.

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இருந்துதான் நூற்றுக்கணக்கில் ஆண்கள் பெண்கள் என்று திரண்டு வந்து,நீண்டவரிசையில் நின்று ஆளுக்கு இரண்டாயிரம் ரூபாய் மாற்றிச் செல்கின்றனர்.இரண்டு 500 ரூபாய் நோட்டுகளும்,பத்து ரூபாய் நாணயங்களும் வாங்கிச் செல்லும் அவர்கள் முகத்தில் உற்சாகம் இல்லை. கைக்குழந்தையோடு வரும் பெண்கள், முதியவர்கள், தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள்,ஆட்டோ ஓட்டுனர்கள் என்று கடை நிலை மக்களே வரிசையில் நின்று ரூபாய் மாற்றிச் செல்கிறார்கள்.அதே போல வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களைக் காட்டி, இரண்டாயிரம் ரூபாய் பெற்றுச் செல்கின்றனர்.

                

பணம் சம்பாதிக்க ஒருநாள் ,அதை மாற்ற ஒரு நாள் என்று அல்லல்படும் நிலைக்கு, மாற்றுதான் என்ன?

- சி.தேவராஜன். 

படங்கள்:அசோக்  

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ