Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

கடலூர், நாகை, பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் மழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு தலைமை செயலாளர்களுக்கு வானிலை மையம் அனுப்பியுள்ள கடிதத்தில் ''அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ள காற்றழுத்தம், ஒன்றாம் தேதி வாக்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நெருங்கும். ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்' என கூறப்பட்டுள்ளது. 

மேலும், 'மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்' என்றும் வானிலை மையம் கடிதத்தில் கூறியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close