Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை 'டாமி'க்கு நெல்லையில் நினைவு அஞ்சலி!  ஒரு டிரைவரின் நெகிழ்ச்சி

சமீபத்தில் சென்னையில் நாயை மாடியிலிருந்து தூக்கி எறிந்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள், வேலூரில் குரங்கை உயிரோடு எரித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வாழும் தமிழகத்தில்தான் இந்த கல்யாண சுந்தரம் வாழ்கிறார் என்றால் மனிதநேயம் மரணிக்கவில்லை என்றே கூற வேண்டும்.

நெல்லை மாவட்டம், திசையன்விளை, அச்சம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். டிரைவரான இவர், செல்லமாக வளர்த்த நாய்க்கு முதலாமாண்டு நினைவு அஞ்சலியை இன்று செலுத்தினார்.  இதுகுறித்து கல்யாணசுந்தரம் கூறுகையில், " சென்னை அசோக்நகரில் குடியிருந்தபோது கண்கூட முழிக்காத ஒரு நாய் குட்டியை எடுத்து வளர்த்தேன். அதற்கு 'டாமி' என்று பெயரிட்டோம். எனக்கு மூன்று ஆண் குழந்தைகள். நாலாவது மகனாக 'டாமி'யை வீட்டில் உள்ள அனைவரும் கருதினோம். அதன் ஒவ்வொரு செயலும் எங்களை மிகவும் வெகுவாக கவர்ந்தது. 15 ஆண்டுகளாக எங்களில் ஒருவனாக 'டாமி' இருந்தது. இந்த சமயத்தில் என்னுடைய சொந்த ஊரான நெல்லை மாவட்டம், திசையன்விளை, அச்சம்பாடுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குடியெர்ந்தோம். அப்போது 'டாமி'யையும் அங்கு அழைத்துச் சென்றோம். அங்கேயும் எல்லோருடனும் 'டாமி' பழகியது.

கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னைக்கு ஒரு வேலையாக வந்தேன். இந்த சமயத்தில் 'டாமி' திடீரென நவம்பர் 27-ம் தேதி இறந்து விட்டதாக வீட்டிலிருந்து எனக்கு போன் வந்தது. இதனால் கடும் மனம் வேதனை அடைந்தேன். என்னுடைய ஒரு மகனை இழந்ததைப் போல கருதினேன். சென்னையிலிருந்து ஊருக்கு செல்லும்வரை டாமியை அடக்கம் செய்ய வேண்டாம் என்று வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தேன். உடனடியாக 'டாமி'யின் உடலை, பாதுகாப்பாக வைத்திருந்தனர். ஊருக்கு சென்ற பிறகு 'டாமி'க்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு என்னுடைய தோட்டத்தில் அடக்கம் செய்தேன்.

'டாமி', எங்களை விட்டுப் பிரிந்து ஓராண்டாகி விட்டது. இருப்பினும் எங்கள் மனதிலிருந்து அது மறையவில்லை. இதனால் ஓராண்டு கடந்த நிலையில் அதற்கு அஞ்சலி செலுத்த வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்தோம். உடனடியாக 'எங்களிடம் பாசமாய் வாழ்ந்த செல்லப்பிள்ளை 'டாமி'க்கு நினைவு நாள், நினைவுகளுடன் ஏ.எம்.கே. கல்யாணசுந்தரம்' என்று 'டாமி'யின் போட்டோவுடன் கூடிய நினைவு அஞ்சலி போஸ்டர் அச்சடித்து ஊர் முழுவதும் ஓட்டினோம். அடுத்து அதை அடக்கம் செய்த இடத்தில் தேங்காய், பழம், மாலை ஆகியவற்றை கொண்டு அஞ்சலி செலுத்தினோம். இதில் என்னுடைய குடும்பத்தினர் மட்டுமல்ல, ஊர் மக்களும் கலந்து கொண்டனர். 'டாமி' இறந்தபிறகு அடுத்து இன்னொரு நாயை வளர்க்க மட்டும் ஏனோ மனமில்லை" என்றார் வருத்தத்துடன். 

பொதுவாக நாய் என்றாலே நன்றி என்று குறிப்பிடும் சூழ்நிலையில் செல்லமாக வளர்த்த 'டாமி'யின் நன்றியை மறவாமல் அதற்கு அஞ்சலி செலுத்தி உள்ளார் இந்த கல்யாணசுந்தரம். 


 எஸ்.மகேஷ்  

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ