Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விழுப்புரம் அருகே அரசு பேருந்துகள் மோதி விபத்து: 5 பயணிகள் பலி

விழுப்புரம் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சேலத்திலிருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்பை தாண்டி எதிர் சாலையில் பாய்ந்தது. இந்நிலையில், சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி சென்ற பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், அந்த பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து சாலையில் விழுந்தது. இதில் ஐந்து பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 30-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அருகே உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து பயணிகள் கூறுகையில், வழுதாவூர் கூட்டுரோடு பேருந்து நிறுத்தத்தில் நெடுஞ்சாலையில் முன்னால் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்த பேருந்தின் மீது, சென்னை நோக்கிச் சென்ற பேருந்து மோதாமல் இருக்க திருப்பிய போது இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தனர்.

- அச்சணந்தி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ