Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதரின் மனைவி ஏர்போர்ட்டில் சிக்கினார்!

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல தாதாவின் மனைவி குமாரியை சென்னை விமான நிலையத்தில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

நில அபகரிப்பு மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள பிரபல ரவுடி காஞ்சிபுரம் ஶ்ரீதரின் மனைவி சென்னையில் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல தாதா ஶ்ரீதர் மற்றும் அவரது மனைவி குமாரி ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த ஶ்ரீதரின் மனைவி குமாரியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

மேலும், ஶ்ரீதரின் 80 சதவீதம் சொத்துக்கள் பெரும்பாலும், அவரது மனைவி குமாரியின் பெயரிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ஶ்ரீதர் துபாயில் தலைமறைவாக இருப்பதாகவும், அவரைக் கைது செய்ய அமலாக்கத்துறை, இண்டர்போல் போலீசாரின் உதவியை நாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close