Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அவசர எண்கள் அறிவிப்பு

நாடா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை உள்பட 5 கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது என்றும் இதனால், தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நாடா புயல் சென்னையிலிருந்து 830 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும், இந்த புயல் நாளை மறுநாள் வேதாரண்யம்-புதுச்சேரி இடையில் கடலூரில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும், நாளை காலை முதல் சென்னையில் கனமழை மழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர்,  நாகை உட்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.

மேலும், விழுப்புரத்தில் உள்ள வானூர், மரக்காணம் தாலுக்காக்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவித்துள்ளது புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை.

இதனிடையே, புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

தற்போது, சென்னை மாவட்டத்திற்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி எண்: 1070, 1077. மின்துறை தொடர்பாக உதவி எண்: 1912. சென்னை மாநகராட்சி உதவி எண்: 1913. தேசிய பேரிடர் மீட்புக்குழு அரக்கோணத்தில் இருந்து சென்னை வந்துள்ளது.

மேலும், கட்டுப்பாட்டு அறை எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 044-25619206, 25619511,25384965, 25383694, 25367823, 25387570 என்ற தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம். 9445477207, 9445477203, 9445477206 என்ற வாட்ஸ்அப் எண்களில் தகவல் அளிக்கலாம். 9445477201, 9445477205 என்ற எண்களில் புகார் கூறலாம்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ