Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மெட்ரோ சேவையை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவையை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் சென்னை நகரத்தின் பொது போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமானதாகும். மெட்ரோ ரயில் போக்குவரத்து மூலம் லாபம் ஈட்டுவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபடலாம். ரயில் வழித்தடங்களை அதிகப்படுத்தியும், ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தும், விளம்பரங்கள் மூலமும் மக்களுக்கு உகந்ததாக மாற்ற வேண்டும். அதை விடுத்து, மெட்ரோ ரயில் சேவையை தனியார் வசம் ஒப்படைக்க முயற்சிப்பது என்பது ஏற்புடையது இல்லை.  

மெட்ரோ ரயில் சேவையை அரசு பராமரிக்கும்போதே, கட்டணம் அதிக அளவில் இருப்பதால் பொது மக்கள் இதனை பயன்படுத்தத் தயங்குகின்றனர். இந்த நிலையில், மெட்ரோ ரயில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால் பயணக் கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமையை அரசு இழக்க நேரிடும், கட்டணமும் உயரும்.  எனவே, மக்கள் நலன் கருதியும், வருமானம் அரசுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மெட்ரோ ரயில் சேவையை தமிழக அரசே இயக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ