Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாடா புயல்: சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு - வானிலை இயக்குநர் பாலச்சந்திரன்

தென்கிழக்கில் 270 கி.மீ தொலைவில் நாடா புயல் மையம் கொண்டுள்ளது. நாடா புயல் வலுவிழந்து வரும் காரணத்தால், அடுத்து வரும் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

நாளை அதிகாலை வேதாரண்யத்தின் அருகே கரையை கடக்கக் கூடும். தற்போது வரை வேதாரண்யத்தில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொருத்தவரை வேகமான காற்றுடன், விட்டு விட்டு மழைப் பெய்யும்.

சில இடங்களில் கனமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  சில இடங்களில் கன மழையும், மிதமான மழையும் பெய்யும்' இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

'நாடா' புயல் அப்டேட்ஸ்

டிச.01: 10.45 தற்காலிக சமையலறைகள் அமைப்பு

சென்னையில் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் அமைச்சர் உதயகுமார் பேட்டி அளித்தார். அப்போது ' வெள்ள நேரத்தில் பாதுகாப்பாக இருக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. புயல் மழை குறித்து தெரிந்து கொள்ள ஊடகங்களை மக்கள் கவனிக்க வேண்டும். அவசர கால உணவு தயாரிப்புக்காக தற்காலிக சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. வெள்ள நீர் தேங்கும் இடங்களுக்கு மக்கள் வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம்' எனக் கேட்டுக் கொண்டார்

டிச.01: 10.30

மீட்புப் படை புதுச்சேரி விரைவு

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் புதுச்சேரி விரைவு. 2 குழுக்களைச் சேர்ந்த 80 வீரர்கள் புதுச்சேரி, காரைக்கால் விரைந்துள்ளனர்

பல்வேறு இடங்களில் மழை

நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, புதுகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை

நாகை வேதாரண்யம், ஆயக்காரன்புலம், தாணிக்கோட்டகம் பகுதிகளில்மழை

அரியலூர், தா.பழூர், ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்டபகுதிகளில் மழை

திருவாரூர், கொரடாச்சேரி, மாவூர், மாங்குடி உள்ளிட்ட பகுதிகள் கனமழை

 

திருச்சி: லால்குடி, புள்ளம்பாடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் பகுதிகளில் மழை

ராம்நாதபுரம்: பரமக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாரல் மழை

விருதுநகர்: வத்திராயிருப்பு, மல்லி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை

திருவண்ணாமலை: வந்தவாசி, செங்கம், கலசப்பாக்கம், போளூரில் மழை

சிவகங்கை: காரைக்குடி, தேவக்கோட்டை திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை

கரூர்: குளித்தலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை

மதுரை: அண்ணாநகர், கே.கே.நகர் கே.புதூர் பகுதிகளில் மழை

திண்டுக்கல்: ஒட்டன் சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை.

படகு சேவை ரத்து

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தம். புயல் காரணமாக திருவள்ளூர் சிலை பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ