Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வலு குறைந்து கரையைக் கடக்கும்...! நாடா புயல் அப்டேட்

நாடா

டகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்றுள்ளது. 'நாடா' என்று பெயரிடப்பட்டுள்ள புயல் சின்னம் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி மணிக்கு 22 கி.மீ வேகத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

வலு குறையும்

தென்மேற்கு வங்கக் கடலில்  சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கில்  330 கி.மீ தொலைவில் உள்ளது. புதுச்சேரியில் இருந்து தென் கிழக்காக 270 கி.மீ தொலைவிலும் நாடா இருக்கிறது. திரிகோணமலையில் இருந்து வடக்கு வடகிழக்காக 210 கி.மீ தொலைவில் இருக்கிறது. தொடந்து இந்தப் புயல் மேற்கு வடமேற்காக நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் படிப்படியாக வலு குறையும். ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாகவே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு கடல் பகுதியில் வேதாரண்யம்-புதுச்சேரி இடையே கடலூரின் தெற்குப் பகுதியில் டிசம்பர் 2-ம் தேதி அதிகாலையில் கரையைக் கடக்கும்.வலு குறைந்து கரையைக் கடப்பதால் புயலால் கடுமையான பாதிப்பு இருக்காது என்றே கூறப்படுகிறது.

காற்றின் வேகம் குறையும்

நாடா புயலின் தாக்கத்தால் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும்போது தரைகாற்றின் வேகமும் குறையும். இன்று மாலையும், இரவிலும் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 2-ம் தேதி காலையில் கரையைக் கடந்த உடன் தரைக்காற்றின் வேகமும் குறைந்துவிடும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்தான் காற்று வீசும். 3-ம் தேதிக்குப் பின்னர் காற்றின் வேகம் முற்றிலும் குறைந்து விடும். வழக்கமான தரைகாற்றே வீசும்.

மழை நிலவரம்

புயல் வலு குறைவதால் காற்றின் வேகம் குறைகிறது. அதே நேரத்தில் மழை அதிக அளவு பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தமிழம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் பரவலாக மழை பெய்யும். குறிப்பிட்ட சில இடங்களில் கனமழை முதல் மிக, மிக கனமழை வரை பெய்யக்கூடும்.இப்போதைய நிலவரப்படி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்திருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கவலையில் இருந்த விவசாயிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.  சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நள்ளிரவுக்குப் பின்னர் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி வேதாரண்யத்தில் 5 செ.மீ மழை பெய்துள்ளது. அதிராம்பட்டினம், நாகபட்டினம் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது.
காரைக்கால், கும்பகோணம், குடவாசல், ஆடுதுறை, மயிலாடுதுறை, நன்னிலம், திருவையாறு, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பெய்துள்ளது. திருச்சி, கரூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வறட்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழகத்தை இந்த மழை ஒரளவுக்கு காப்பாற்றும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

-கே.பாலசுப்பிரமணி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close