Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வலுவிழந்தது நாடா புயல்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாடா புயல் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள  நாடா புயல் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுவிழந்து, நாளை அதிகாலை கடலூர், வேதாரண்யம் பகுதி இடையே கரையைக்கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் தற்போது புதுச்சேரி அருகே 210 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை நீடிக்கும்'. என்றார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close