Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துறையூர் வெடிவிபத்து வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்

துறையூரை அடுத்த முருங்கப்பட்டியில் உள்ள தோட்டா தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 18 பேர் இறந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன். மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை இன்று சம்பவ இடத்தில் ஆய்வு செய்ய உள்ளது. 

உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்பவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஐன், வளர்மதி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். ஒருகட்டத்தில் இரவானதால் மீட்புப்பணியை நிறுத்திய மீட்புக்குழுவினர். மூன்று உடல்களுக்கு மேல் கண்டுபிடிக்கவில்லை. இறந்தவர்களின் சடலம் சிதைந்திருந்ததால் உடல்களை வைத்துக்கூட துக்கம் அனுசரிக்க முடியாததால் துறையூர் பகுதியே சோகத்தில் உறைந்து போயுள்ளது.

 - சி.ய.ஆனந்தகுமார்.

 

.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close