Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓடும் பேருந்தில் மாணவர்களுக்கு கத்திக்குத்து: தூத்துக்குடி பயங்கரம்

தூத்துக்குடி மாவட்டம், கோவங்காடு பகுதியில் ஓடும் பேருந்தில் 2 மாணவர்களை, சகமாணவர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவங்காடு பகுதியில் இருந்து மாணவர்கள் இன்று வழக்கம் போல் பேருந்துகளில் ஏறி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். இதில் 9-ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, 4 மாணவர்கள் சேர்ந்து அந்த மாணவர்கள் 2 பேரையும் கத்தியால் குத்தி தப்பியுள்ளனர். படுகாயம் அடைந்த மாணவர்கள் 2 பேரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்த தகவலின் பேரில் இரண்டு மாணவர்களை கத்தியால் குத்திய 4 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்