Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விபத்து ஏற்படும் என்பதற்காக கார் ஓட்டாமல் இருக்க முடியுமா? ஆளுநர் மாளிகை வாசலில் கொந்தளித்த வைகோ

ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துப் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 'விபத்து ஏற்படும் என்பதற்காக சாலையில் கார்களை ஓட்டாமல் இருக்க முடியுமா' என கேள்வி எழுப்பினார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். ஜல்லிக்கட்டு மற்றும் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ஆளுநருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ''ஆளுநர் வித்யாசாகர் ராவ் எனது நண்பர். கடந்த முறையும் நட்பு ரீதியாக அவரை சந்தித்தேன். இந்த முறையும் நட்பு ரீதியாக சந்தித்தேன்.

தமிழகத்தின் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினேன். அவற்றை சொல்ல முடியாது. குறிப்பாக, கலாசாரத்தோடு தொடர்புடைய ஜல்லிக்கட்டு பற்றி விளக்கம் தெரிவித்தேன். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பிரதமரிடம் வலியுறுத்துமாறு கூறினேன். டிசம்பர் 10-ம் தேதி பிரதமரை சந்திக்கும்போது ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசுவதாக ஆளுநர் தெரிவித்தார்.

குழந்தைகள் போல் காளைகளை தமிழர்கள் வளர்த்து வருவதை எடுத்துக்கூறினேன். விபத்து ஏற்படும் என்பதற்காக சாலையில் கார்களை ஓட்டாமல் இருக்க முடியுமா?'' என கேள்வி எழுப்பினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close