Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிசம்பர் மழை அன்றும்... இன்றும்...! புகைப்பட ஒப்பீடு! (Album)

மழை

 டிசம்பர் மழை அன்றும்... இன்றும்...! புகைப்பட தொகுப்பினை காண இங்கே க்ளிக் செய்யவும்

சென்ற வருடம் இதே நாளை நம்மால் எளிதில் மறந்திருக்க முடியாது... ஆனந்தத்துடன் ரசிக்க வேண்டிய மழையோ ருத்ர தாண்டவம் ஆடி மக்களை அச்சமடைய வைத்தது; அந்த அழிவு நாட்டியத்தின் பாதிப்பு மிகப்பெரியது. வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழகம் பெறும் மழையை விடவும் பல மடங்கு மழை 2015 டிசம்பர் மாதத்தில் மட்டும் பெய்தது. 2015 டிசம்பர் 1-ம் தேதி மட்டும் சென்னையில்  49 செ.மீ. அளவுக்கு மழைப் பொழிந்தது. இது கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத, வரலாறு காணாத மழை!

இரவில் உறங்கச் சென்ற மக்களை, நள்ளிரவில் வீட்டுக்குள் வெள்ளம் வந்து எழுப்பும் அளவுக்கு வானத்தை உடைத்துக்கொண்டு மழை கொட்டியது. சென்னை, புதுவை, கடலூர் பகுதிகளைச் சுற்றியுள்ள நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் கட்டுக்கடங்காமல் வெளியேறியது. இதனால், குடியிருப்பு பகுதிகளில், அழையா விருந்தாளியாக நுழைந்த மழை நீர் அத்தனையையும் ஆக்கிரமித்துக்கொண்டது. சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துகொண்டதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கிப் போயினர். 

சென்னையில் உள்ள அடையாறு, கூவம் ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் என அனைத்திலும் வெள்ள நீர் காட்டாறாக ஓடியது. ஆற்றின் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால், மக்கள் சென்ற பாதைகளை தனக்கான பாதையாக மாற்றிக்கொண்டது மழை வெள்ளம்!குடியிருப்புகளில் தரைத்தளம் முழுவதும் மூழ்கியதால், மக்கள் முதல் தளத்திலும் மொட்டை மாடிகளிலும் தஞ்சம் புகுந்தனர். சென்னைக்கு வந்து பல ஆண்டுகளாக உழைத்து சேமித்த சொத்துக்கள், கண் முன் வெள்ளத்தில் அடித்துச் செல்வதைப் பார்த்த மக்கள் மனம் பதைபதைத்தது. 

                                      டிசம்பர் மழை அன்றும்... இன்றும்...! புகைப்பட தொகுப்பினை காண இங்கே க்ளிக் செய்யவும்

பேரிடர் மீட்புத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றின் சார்பாக சென்னை முழுவதிலும் நூற்றுக்கணக்கான படகுகளைக் கொண்டு குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டனர். தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி போன்ற இடங்களில் மீட்புப் படையினர் செல்ல முடியாத அளவுக்குத் தண்ணீர் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அதுபோன்ற பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கியோர் மீட்கப்பட்டனர். ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் குடிநீர் அளிக்கப்பட்டன. இப்படி நம் கண் முன் வந்து செல்கின்றது 2015 மழை வெள்ள காட்சிகள். 

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் மக்களுக்கு மீண்டும் பயம் தொற்றிக்கொண்டது. என்ன ஆகுமோ... ஏது ஆகுமோ என சென்னை வாழ்மக்கள் பதற்றமடைந்த  நிலையில், வழக்கமாக பெய்யும் மழைகூட பெய்யாமல், பொய்த்துப் போனது. தற்போது உருவான நாடா புயலும் மழை இல்லாத சாதாரணப் புயலாக நடையைக்கட்டியது. இதனால், இந்த ஆண்டு கடும் தண்ணீர் பஞ்சம் உருவாகும் நிலை உருவாகியுள்ளது. வழக்கமாக பெய்யும் மழையில் வெறும் 20 சதவிகிதம் மழை மட்டுமே இதுவரை தமிழகத்தில் பெய்திருக்கிறது. தென்கிழக்கு வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தமிழகத்துக்கு மழையாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இந்த வருடம் எதிர்பார்த்த மழை பொழியவில்லையே தவிர, மழை குறித்தான மக்களின் பயம் மட்டும் சற்றும் குறையவில்லை. 2015-ம் ஆண்டு மழை வெள்ளத்தின்போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா? சென்ற ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீண்டும் புகைப்படங்கள் எடுத்துள்ளோம். மழையின் பாதிப்புகளை, இப்போது உள்ள சீரான நிலைமையோடு ஒப்பிட்டுப் பார்க்க இங்கே க்ளிக் செய்யுங்கள்...

டிசம்பர் மழை அன்றும்... இன்றும்...! புகைப்பட தொகுப்பினை காண இங்கே க்ளிக் செய்யவும்

-ஆ.நந்தகுமார்   

படங்கள்: மா.பி.சித்தார்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close