Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாடா புயலால் தத்தளித்த 35 மீனவர்கள் கரை திரும்பினர்

நாடா புயலால் நடுக்கடலில் தத்தளித்த கோடியக்கரை மீனவர்கள் 35 பேர் இன்று கரை திரும்பினர்.

நாகை மாவட்டம், கோடியக்கரையைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 29-ம் தேதி கடலுக்கு சென்றனர். இந்தநிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு நாடா என்று பெயரிடப்பட்டது.

இதனிடையே, புயலின் தாக்கத்தால் கோடிக்கரையைச் சேர்ந்த 35 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர். புயலின் காரணமாக அவர்களை தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு நாடா புயல் கடலூருக்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடந்தது. இதனிடையே, 35 பேரும் இன்று கரை திரும்பினர். அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close