Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகலா ஊரில் 'தீபா பேரவை'க்கு ஆள் சேர்த்ததால் மிரட்டல்!

தஞ்சாவூர் : சசிகலாவின் சொந்த மாவட்டமான தஞ்சாவூர் மாவட்டத்தில் தீபா பேரவைக்கு ஆள் சேர்க்கும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள் அமைப்பின் நிர்வாகிகள். இந்நிலையில் தீபாவுக்கு ஆதரவு திரட்டுவதால் தன்னை சசிகலா உறவினர்கள் மிரட்டுவதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார் தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர்.

தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவையடுத்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ளார் சசிகலா. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சசிகலா ஃபிளக்ஸ் போர்டு கிழிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக அரசியல் கட்சி துவங்கும் வேலையும் நடந்து வருகிறது.

எங்கள் அம்மா ஜெயலலிதா 'தீபா பேரவை' எனும் பெயரில் அமைப்பு துவங்கப்பட்டு, மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் தீபா பேரவைக்கு ஆள் சேர்க்கும் பணிகளும் நடந்து வருகிறது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இதற்கான வேலைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன்படி, சசிகலாவின் சொந்த ஊரான மன்னார்குடியை உள்ளடக்கிய தஞ்சாவூர்  மாவட்டத்திலும் தீபா பேரவைக்கு ஆள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூரில் தீபா பேரவைக்கு ஆதரவு திரட்டும் வகையில், போஸ்டர் அடித்து பிரசாரம் செய்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் என்பவர், தீபாவுக்கு ஆதரவு திரட்டுவதால் தன்னை சசிகலா உறவினர்கள் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராஜசேகரனிடம் பேசினோம். "நான் அதிமுகவில் 15 வருஷமா இருக்கேன். என் குடும்பமே அ.தி.மு.க.வைச் சேர்ந்தது தான். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதில் எனக்கு தொடர விருப்பம் இல்லை. அதனால் என்னை தீபா பேரவையில் இணைத்துக் கொண்டேன். அதில் உறுப்பினர்கள் சேர்க்கச் சொல்லி அதன் ஒருங்கிணைப்பாளர்கள் என்னிடம் சென்னார்கள். நானும் தஞ்சாவூர் முழுவதும் போஸ்டர் ஒட்டினேன். அம்மா மேல் உண்மையான பாசம் கொண்ட அனுதாபிகள் நிறைய பேர் பேசினார்கள். இரண்டு நாட்களில் மூவாயிரம் பேருக்கு மேல் பேசி தன்னை இணைத்துக் கொள்வதாக கூறியுள்ளார்கள் எல்லோருடைய முகவரியும் குறித்து வைத்துள்ளேன்.

இந்நிலையில், சசிகலாவின் ஊரில் ஆள் சேர்ப்பதால் எனக்கு மிரட்டல் வரத்துவங்கியுள்ளது. சசிகலா கணவர் நடராஜன் ஊருக்கு அருகில்தான் என் ஊரான தெக்கூர் கிராமம் உள்ளது. அது மட்டும் இல்லாமல் சசிகலாவின் முக்கிய உறவினர்கள் எல்லாமே தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் வசித்து வருகிறார்கள். இங்கு தீபாவுக்கு ஆதரவாக யாரும் செயல்படுவதை அவர்கள் யாரும் விரும்பவில்லை.   அதனால் சிலர் போன் செய்து ’உனக்கு எதுக்கு வேண்டாத வேலை நீ ஏன் தீபாவுக்கு ஆள் சேர்க்கிறாய்’ என கடுமையாக பேசினார்கள்.

'எந்த இயக்கத்தில் இருக்க வேண்டும் என முடிவு செய்வது என் விருப்பம்' என நான் சொன்னேன். அதைத்தொடர்ந்து மிரட்டல்கள் அதிகளவில் வரத்துவங்கியுள்ளது. சசிகலா உறவினர் ஒருவர், எனக்கு போன் செய்து ’தீபா பேரவைக்கு ஆள் சேர்க்கிறியா ஒழுங்கா இருக்க மாட்டியா?' என்றார். 'இதனை நிறுத்திக்கொள் இல்லை என்றால் நடப்பதே வேறு' என மிரட்டினார். இதற்கெல்லாம் நான் பயப்படப் போவது இல்லை. வர இருக்கிற எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்த நாளான 17-ம் தேதி சென்னை தி நகரில் உள்ள தீபாவின் இல்லத்தில் எல்லோரும் கூடி அவரை சந்திக்க உள்ளோம் அவர் சொல்படி செயல்பாடுகள் இருக்கும்" என்றார்.

- கே.குணசீலன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close