Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகலா திறக்கும் முதல் சிலை இது! அ.தி.மு.க.வினரை திருப்திப்படுத்த புது திட்டம் #VikatanExclusivePicture

ஜெயலலிதா திறப்பதாக இருந்த எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலையை வரும் 17-ம் தேதி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சசிகலா திறந்து வைக்க உள்ளார். இந்த சிலை திறப்பால் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மற்றும் அதிருப்தி அ.தி.மு.க.வினரின் ஆதரவு சசிகலாவுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் அவரது ஆதரவாளர்கள். 

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகி விட்டார் சசிகலா. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகிகளை கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதித்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு பத்திரிகை நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்று ஜெயலலிதாவின் புகைப்படத்தை திறந்து வைத்தார். அடுத்து, எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலையை வரும் 17-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். 

இதுகுறித்து எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன், விழா ஏற்பாட்டாளர் நடிகர் ஜெ.எம்.பஷீர் என்ற விஜய்கார்த்திக் ஆகியோர் கூறுகையில், "எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சிலையை அம்மா (ஜெயலலிதா) திறக்க அப்போது முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது அவர் உயிரோடு இல்லை. இதனால் எம்.ஜி.ஆரின் சிலையை சின்னம்மா திறந்து வைக்க உள்ளார். இதற்காக அவர், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான 17-ம் தேதி காலை 10.30 மணியளவில் ராமாவரம் எம்.ஜி.ஆரின் இல்லத்துக்கு வருகிறார். அந்த வளாகத்தில் அமைந்துள்ள சிலையை திறந்து வைத்தப்பிறகு, எம்.ஜி.ஆரின் உறவினர்களிடம் ஆலோசனை நடத்துகிறார். இதுதொடர்பாக சின்னம்மாவை சந்தித்து பேசி உள்ளோம். இந்த விழாவில் தமிழக அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். இதையடுத்து அன்னதான நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பிறகு மாலையில் இன்னிசை, கச்சேரி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பிரபல மற்றும் முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுக்க உள்ளோம்" என்றனர். 

இதுகுறித்து கார்டன் வட்டாரங்கள் கூறுகையில், "எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் சசிகலாவே அந்த சிலையை திறக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதன்மூலம் எம்.ஜி.ஆர் ரசிகர்களிடம் சசிகலாவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம். மேலும், சசிகலா, எம்.ஜி.ஆரின் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதன்பிறகு அனைவருடனும் புகைப்படமும் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றனர்.

- எஸ்.மகேஷ் 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close