Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜல்லிக்கட்டு போராட்டத்தை நிறுத்த போலீஸார் செய்தது சரியா? #PeopleSurvey

மெரினா

ல்லிக்கட்டுக்கான போராட்டம், சென்னை மெரினா மற்றும் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் நடைபெற்றது. ஜல்லிக்கட்டுக்கு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால், போராட்டக்காரர்கள், போராட்டத்தை முடித்துக் கொண்டு கலைந்து செல்லுமாறு போலீஸார் கேட்டுக்கொண்டனர். என்றாலும், போராட்டத்தை கைவிடாமல் ஒரு தரப்பினர் தொடர்ந்து மறுத்து வந்தனர். இதைச் சமாளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, கூடியிருந்த மக்களை வலுக்கட்டாயமாக போலீஸார் அப்புறப்படுத்தினர். கலைந்து வெளியேற மறுத்தவர்கள் மீது மட்டுமல்லாமல், போராட்டக்களத்தில் கூடியிருந்த அனைவர் மீதும் தடியடி நடத்தப்பட்டு, கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர். பெண்கள், முதியோர் என்ற பாகுபாடு இல்லாமல் கண்மூடித்தனமாக போலீஸார் தாக்கினர். போராட்டத்திற்கு இடையே சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு போலீஸார் தீ வைத்த நிகழ்வுகளும் அரங்கேறின. மக்களை பாதுகாக்க வேண்டிய போலீஸாரே  இவ்வாறு நடந்து கொள்வது சரியா என்பதற்கான உங்களது பதிலை இந்த சர்வேயில் கருத்துகளாகத் தெரிவியுங்கள்...

ஜல்லிக்கட்டு போராட்டத்தை நிறுத்த போலீஸார் செய்தது சரியா? #PeopleSurvey

 

1). தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தில்... *

2). ‘கலைந்து செல்கிறோம்’ என்று சொன்ன பிறகும் போலீஸ் தடியடி நடத்தியது? *

3). வாகனங்களுக்கு தீவைத்த காவல் துறையின் செயல்... *

4). தமிழகத்தில் இதுபோல் இனி எந்தப் பிரச்னை வந்தாலும் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து போராடுவார்களா...? *

5). ஜல்லிக்கட்டுப் போராட்டம் பற்றியும்... போலீஸாரின் வன்முறை பற்றியும் உங்கள் கருத்துகளை ஓரிரு வரிகளில் பதிவிடவும்

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

- நந்தினி சுப்பிரமணி

 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close