Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகலா தமிழக முதல்வர் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? அதிர்ச்சி முடிவு! #SurveyResults

சசிகலா

.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, சமுக வலைதளங்களிலும், மக்கள் மத்தியிலும் பல்வேறு கருத்துகளும், விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் அவர் முதல்வராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சசிகலாவை, மக்கள் முதல்வராக ஏற்றுக் கொள்கிறார்களா என நேற்று சர்வே நடத்தினோம். இந்த சர்வேயில் பலரும் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

'தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்க இருப்பதை... 'என்ற கேள்விக்கு, 97.13 சதவிகிதம் பேர் 'ஏற்றுக்கொள்ளவில்லை' என தெரிவித்து வாக்களித்துள்ளனர். வெறும் 2.03 சதவிகிதம் பேர் மட்டுமே ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். மலைக்கும், மடுவுக்கும் இடையேயான வித்தியாசமாக இது உள்ளது. அதேசமயம் ஒ. பன்னீர்செல்வத்துக்கான ஆதரவு பல மடங்கு அதிகரித்துள்ளது. 'முதல்வராக இருந்த ஒ.பி.எஸ்-ஐ மாற்றியது?' என்ற கேள்விக்கு 89.39 சதவிகிதம் பேர் தவறு என வாக்களித்துள்ளனர். ஒ.பி.எஸ்ஸை மாற்றியது சரி என 2.51 சதவிகிதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர். மற்ற கேள்விகளுக்கான சர்வே முடிவுகள் கீழே...

'சசிகலா முதல்வராக பதவியேற்க இருப்பது குறித்த உங்களது கருத்துகளை பகிருங்கள்...' என்ற கேள்விக்கு,

" sad', 'Its not good for Tamilnadu', 'Wrong decision', ' RIP Tamil nadu', 'A.I.A.D.M.K CLOSSSSSSSSS', 'BLACK DAY' போன்ற சசிகலாவுக்கு எதிரான கருத்துக்களையே பெரும்பாலானோர் தெரிவித்து, தங்களது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளனர். 

- ஆ.நந்தகுமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close