Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரவில் நடந்த ரகசிய கூட்டம்! கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் ‘மகிழ்ச்சி’ #VikatanExclusive

பெண் எம்.எல்.ஏ-க்கள் 

கூவத்தூர் எம்.எல்.ஏ.க்கள் முகாமில் இரவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ரகசிய கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி.தினகரனும் தெரிவித்த அறிவிப்பு எம்.எல்.ஏ.க்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

சசிகலாவால் கை காட்டப்பட்ட எடப்பாடி பழனிசாமி, முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்பு விழாவுக்கு ஆளுநர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் முன்பை விட கூடுதல் கவனிப்பு நடந்து வருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று இரவு 10 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ரகசிய கூட்டம் ரிசார்ட்டில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்களிடம், "கட்சிக்கு துரோகம் செய்து விட்டு எதிரி பன்னீர்செல்வத்தை அம்மாவின் ஆசியாலும் சின்னம்மாவின் வழிகாட்டுதலாலும் வீழ்த்தி விட்டோம். இதற்கெல்லாம் நம்முடைய ஒற்றுமையே காரணம். இந்த சந்தோஷம் நீடிக்க வேண்டும் என்றால் நீங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் விசுவாசத்தை காட்ட வேண்டும். அதில் நாம் மெஜாரிட்டியை நிரூபித்து விட்டால் நம்மை யாராலும் அசைக்க முடியாது" என்று டி.டி.வி. தினகரன் பேசியதாக எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்தார். 

அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "முதல்வராக என்னை தேர்வு செய்த சின்னம்மாவுக்கு காலம் முழுவதும் என் விசுவாசத்தை காட்டுவேன். இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள அவர் இங்கு இல்லை. சிலரது சூழ்ச்சியால் அவர் சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார். பல சோதனைகளை கடந்து விட்டோம். இன்னும் ஒரே ஒரு சோதனை மட்டும் நம்முன்னால் இருக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம். ஏனெனில் நம்மிடம் மெஜாரிட்டியான எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர்" என்றார்.

கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்கள்

அடுத்த கூட்டத்திலிருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேறினர். இதன்பிறகு சசிகலா அணிக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டும் தனியாக ரகசிய கூட்டத்தை நடத்தினர். அந்தக்கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. "ஓ.பன்னீர்செல்வம் அணி நம்பிக்கை வாக்கெடுப்பில் நமக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் செய்ய அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர். ஏன், நம்முடைய எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கூட நமக்கு எதிராக செயல்படலாம். நம்முடைய அணியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கடைசிவரை ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இதற்காக அவர்களின் விருப்பங்கள், ஆசைகளை நிறைவேற்றுவோம். எம்.எல்.ஏ.க்களின் பலம், பலவீனத்தை தெரிந்துக் கொண்டு செயல்பட வேண்டும். சின்னம்மாவின் வழிகாட்டுதல்படி செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஏற்கெனவே நம் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம். இன்னும் நிலுவையில் உள்ள வாக்குறுதிகளையும் வாக்கெடுப்பு முடிந்தவுடன் நிறைவேற்றி கொடுத்துவிட வேண்டும். இல்லையெனில் சிக்கலை ஏற்படுத்த முடியும். மெஜாரிட்டியை நிரூபித்து அம்மாவின் ஆட்சியை தொடர வேண்டும். சிறைக்குள் இருந்தே சின்னம்மா நமக்குத் தேவையான அறிவுரைகளை கொடுப்பார். அதன்படி நடப்போம்" என்று தன்னுடைய ஆதரவாளர்களிடம் மூத்த நிர்வாகி இந்த தகவலை கூறியிருக்கிறார். 

மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டப்பிறகு ஆதரவளித்த எம்.எல்.ஏ.க்களுக்கு நாம் கொடுக்கப் போகும் பரிசு அவர்கள் அனைவரையும் ஆச்சர்யப்படுத்த வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் டி.டி.வி. தினகரன் கலந்து ஆலோசித்துள்ளார். என்ன பரிசு என்று சொல்லும் போது, தற்போதைய சூழ்நிலையில் பணமாக கொடுக்க வழியில்லை. இதனால் சர்பைரஸ் கிப்ட் கொடுக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அந்த கிப்ட் சர்பைரைஸ் என்று கட்சியின் மூத்த நிர்வாகியிடம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் வெளியானதும் சசிகலா அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளதாக கூவத்தூரில் உள்ள அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

எஸ்.மகேஷ் 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close