Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எல்லா திட்டங்களிலும் தமிழகம்தான் முதலில் பலியாகிறது!'- சர்வே முடிவுகள் #VikatanSurveyResult

2017 தமிழகத்துக்கு நிச்சயம் சவாலான ஆண்டு. அரசியல் மாற்றங்கள், மாணவர் புரட்சி, மக்கள் போராட்டங்கள் என முற்றிலும் வேறுபட்ட களத்தில் நிற்கிறது நம் மாநிலம். ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு விவகாரம், ஹைட்ரோகார்பன் திட்டம், மீனவர் பிரச்னைகள் என மத்திய அரசின் மீதான அதிருப்தியும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவை ஒவ்வொன்றும் களத்தில் போராட்டங்களாகவும் மாறி வருகின்றன. அப்படி கடந்த 20 நாள்களுக்கும் மேலாக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் மக்கள் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். அதற்கு அந்த மாவட்ட மக்களிடத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் ஆதரவை நேரில் சென்று தெரிவித்து விட்டனர். இந்நிலையில் இதுகுறித்து மக்கள் கருத்து என்ன என்பது குறித்து அறிய விகடன் இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டது. அதன் முடிவுகளைக் கீழே காணலாம்.

விகடன் சர்வே முடிவுகள்

இதுபோன்ற திட்டங்களில் அரசு மக்களை கஷ்டப்படுத்துவதையும், வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடந்து கொள்வதையும் கடுமையாக எதிர்க்கின்றனர் மக்கள். அதுமட்டுமின்றி, கூடங்குளம் அணுஉலை, மீத்தேன் எடுப்பது, ஹைட்ரோகார்பன் எடுப்பது என அரசு சொல்லும் 'வளர்ச்சித் திட்டங்களில்' தமிழகம்தான் முதலில் பலியாகிறது என்ற கருத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர் வாசகர்கள். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close