Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இளைஞர்கள் ஆதரவு யாருக்கு?' விகடன் சர்வே விளக்கம்

'இளைஞர்கள் ஆதரவு யாருக்கு?'

ல்லிக்கட்டில் ஆரம்பித்து அண்மையில் நிகழ்ந்த மீனவர் படுகொலை வரையிலான  தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி போராட்டம் நடத்தி வருகிறார்கள் தமிழக இளைஞர்கள்!

மக்களிடம் வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக்கு வந்துள்ள அரசியல்வாதிகள், தங்களது சுய லாபத்துக்காக அமைதி காத்துவரும் சூழலில், இளைஞர்களே தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்திவருவது மக்களிடையே பலத்த வரவேற்பையும் பெற்றுவருகிறது. இந்த சூழலில், இன்றைய இளைஞர்கள் அரசியல்வாதிகளை எப்படிப் பார்க்கிறார்கள்? இவர்களில் யாரை தங்களது தலைவராக ஏற்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடும் முயற்சியாக, தமிழகம் முழுவதும் இளைஞர்களிடம் மட்டும் கருத்துக்கணிப்பினை நடத்தியது விகடன் குழு. 

'இளைஞர்கள் ஆதரவு யாருக்கு?' - மார்ஃபிங்

'இளைஞர்கள் ஆதரவு யாருக்கு?' என்ற தலைப்பில், 7 கேள்விகளை முன்வைத்து நடத்தப்பட்டது இந்த சர்வேயில், மொத்தம் 11,472 இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதில் பெண்கள் 4,641 பேர். இவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள். சர்வே முடிவில், தற்போதைய அரசியல் தலைவர்கள் யார் மீதும் இளைஞர்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற குரல் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது. இதன் அடிப்படையில், சர்வே முடிவுகளை 15-03-2017 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் விரிவாகப் பிரசுரித்திருந்தோம். அதில், ஒவ்வொரு  தலைப்பின் கீழும் இளைஞர்கள் தெரிவித்திருந்த கருத்துகளை சதவிகித அடிப்படையில், வரைபடங்களாகவும் தெளிவாக விளக்கியிருந்தோம். குறிப்பாக, 'இன்றைய அரசியல் தலைவர்களில், யார் உங்கள் சாய்ஸ்?' என்ற 7-வது கேள்விக்கு 44.4 சதவிகித இளைஞர்கள் அளித்திருந்த பதில், 'இவர்களில் யாரும் இல்லை' என்பதுதான். மற்றபடி இன்றையத் தமிழக அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே பெற்றுள்ள ஆதரவு விவரங்களையும் தெளிவாகப் பட்டியலிட்டிருந்தோம். அதில், பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணித் தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸுக்கு, இளைஞர்களின் ஆதரவு 4.07 சதவிகிதமாக உள்ளது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 'விகடன் கருத்துக்கணிப்பில், அன்புமணி ராமதாஸுக்கு, 16.75 சதவிகித இளைஞர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக' மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களோடு தவறான தகவல்களை சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். 

'இளைஞர்கள் ஆதரவு யாருக்கு?' - மார்ஃபிங்

விகடன் நடத்திய கருத்துக்கணிப்பில், தமிழக அரசியல்வாதிகளுக்கு கிடைத்திருந்த உண்மையான ஆதரவு விவரப் பட்டியல் இதுதான்.... 

ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க) 16.75 %

மு.க.ஸ்டாலின் (தி.மு.க) 12.91 %

தீபா (எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை) 5.09 %

விஜயகாந்த் (தே.மு.தி.க) 4.27 %

அன்புமணி ராமதாஸ் (பா.ம.க) 4.07 %

சீமான் (நாம் தமிழர் கட்சி) 3.53 %

கருணாநிதி (தி.மு.க) 3.38 %

திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) 1.84 %

எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க) 1.49 %

வி.கே. சசிகலா (அ.தி.மு.க) 0.94 %

வைகோ (ம.தி.மு.க) 0.93 %

டி.டி.வி தினகரன் (அ.தி.மு.க) 0.4 %

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close