Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையைச் சேர்ந்த Stayzilla ஸ்டார்ட்-அப்பின் சி.இ.ஓ கைது!

Yogendra yadav

சென்னையில் தொடங்கப்பட்ட ஸ்டேசில்லா (Stayzilla) ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் சி.இ.ஓ, விளம்பர நிறுவனம் ஒன்று கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்டேசில்லா, விடுதிகளில் தங்குவதற்கான சேவை அளித்து வந்த நிறுவனம். இதன் நிறுவனர் யோகேந்திர வாசுபால். இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். ஸ்டேசில்லாவுக்கும், ஜிக்சா (Jigsaw) விளம்பர நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தம் இருந்துள்ளது. இதையடுத்து ஜிக்சா நிறுவனம், ஸ்டேசில்லாவுக்கு விளம்பர சேவை அளித்து வந்தது. பின்னர், ஸ்டேசில்லா தங்களுக்குத் தர வேண்டிய 1.7 கோடி ரூபாய் பணத்தைக் கொடுக்கவில்லை என்று போலீஸில் புகார் அளித்தது ஜிக்சா நிறுவனம். இதன் அடிப்படையில், வாசுபால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், ஜிக்சா நிறுவனத்துக்கு வாசுபால் பணம் கொடுக்காததற்கு, 'குடும்ப உறுப்பினர்களுக்கும் தன் குழந்தையின் உயிருக்கும் அச்சுறுத்தல் கொடுத்ததாகவும்' தெரிவித்துள்ளார். இந்த விஷயம் எல்லாம், ஸ்டேசில்லாவின் நிறுவனர்களில் ஒருவரான சச்சித் சிங்கி, பொது தளத்தில் கூறியபின் அம்பலமானது. 

வாசுபால், 'எங்களுக்கும் ஜிக்சா நிறுவனத்துக்கும் பிரச்னைகள் முற்றிய பிறகு அவர்களை நாங்கள் சட்டமுறையில் அணுகச் சொன்னோம்' என்று கூறியுள்ளார்.

இதையடுத்து வாசுபாலின் மனைவி, 'ஒரு சிவில் வழக்காகப் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டியது, வேறோரு பக்கம் திசை மாறியுள்ளது. பணப் பிரச்னை புகாருக்காக கிரிமினல் போல் நடத்துவது முறையற்றது. இதுவரை, வாசுபால் மீதுள்ள ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை' என்று கூறியுள்ளார்.

இந்தப் பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதைத் தொடர்ந்து கர்நாடகா ஐ.டி அமைச்சர், பிரியாங் கார்கே தமிழக ஐ.டி அமைச்சர் டாக்டர் மணிகண்டனிடம் பேசியுள்ளார். இதுகுறித்து கார்கே அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close