Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘புதிய மொந்தையில் பழைய கள்!’ - பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின்

M.K.Stalin

இன்று, 2017-2018 ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின், பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது, “சசிகலாவின் பினாமி ஆட்சி சார்பில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதா, சசிகலா பெயரைக் கூறி, நிதிநிலை அறிக்கையை தாக்கல்செய்ய ஆரம்பித்தார், நிதி அமைச்சர் ஜெயக்குமார். இதற்கு நான் மறுப்புத் தெரிவித்தேன். அதற்கு சபாநாயகர், பெயர் குறிப்பிடுவது தவறில்லை என்றார்.

நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்படும் நாளான இன்று, நான்கு அமைச்சர்கள் வரவில்லை. அவர்கள், தேர்தல் ஆணையத்தைச் சந்திக்கப் போயிருக்கிறார்களா? சசிகலாவைப் பார்க்கப் போயிருக்கிறார்களா? அல்லது டெண்டர் நடவடிக்கைகளைப் பார்க்கப் போயிருக்கிறார்களா? 

அ.தி.மு.க ஆட்சியில் யார் பொறுப்பில் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் கடன் அதிகரித்த நிலையில்தான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இன்றைய பட்ஜெட்டில், விவசாயிகள் கடன் தள்ளுபடி என்ற நிலை இல்லை, புதிய மின்திட்டங்கள் எதுவும் கிடையாது, முன்னர் கூறிய பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது, தொலைநோக்குத் திட்டம் 2023-க்கான நிதி ஒதுக்கீடு கிடையாது, 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை, மொத்தத்தில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. 

குற்றவாளி வழிகாட்டும் ஆட்சி இது. பூஜ்ஜியத்தை ராஜ்ஜியமாக்க முயன்றுள்ளார்கள். வளர்ச்சித் திட்டங்களே இதில் அறிவிக்கப்படவில்லை. அரசு நிதி நிர்வாகம் என்ற அணையா விளக்கு அணைக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையைப் பற்றி சுருக்கமாகக் கூற வேண்டுமானால்,  ‘புதிய மொந்தையில் பழைய கள்.' ” என்று கூறினார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close