Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஆர்.கே.நகரில் தினகரனை வீழ்த்துவேன்' - மதுசூதனன் அதிரடி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது.

Madhusudhanan

இதை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் இன்று நடந்தது. ஓ.பி.எஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'அவைத் தலைவர் மதுசூதனன், ஆர்.கே.நகர் வெற்றி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதற்கான முடிவு, ஆட்சிமன்றக் கூட்டத்தில் ஆலோசித்து எடுக்கப்பட்டது' என்றார்.

இதற்கிடையே, 'நான் தினகரனை வீழ்த்தி ஆர்.கே.நகரில் வெற்றிபெறுவேன்' என மதுசூதனன் கூறியுள்ளார்.  1991-ம் ஆண்டு ஆர்.கே.நகரில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்றார். மேலும், கடந்த 2015 மற்றும் 2016-ல் ஜெயலலிதாவுக்கு மாற்று வேட்பாளராகவும் மதுசூதனனே தெரிவிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் ஆ.முத்துக்குமார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close