Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கடைகளை மூடுவதால் வருமான இழப்பு பெரியதாக இல்லை' : டாஸ்மாக் ஊழியர்கள் தகவல்! 

                     டாஸ்மாக்

மிழக அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதால், அரசுக்கு வரும் வருவாயில் பெரியதாக இழப்பு ஒன்றும் இல்லை என்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர். பணியாளர்களின் நிலையைக் கவனத்தில் கொள்ளாமல் நீதிமன்ற கெடுவுக்குப் பயந்து தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மூடுகிறது என்றும் அவர்கள் கொந்தளிக்கிறார்கள். 

தமிழக அரசின் 2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இன்று (வியாழன்) தாக்கல் செய்தார். அப்போது அவர்,"நடப்பு நிதியாண்டில் டாஸ்மாக் மூலமாக நடத்தப்படும் மதுபானக் கடைகளில் மேலும் 500 கடைகளை சமீபத்திலும், மொத்தத்தில் 1000 கடைகளை மூடியுள்ளதன் தாக்கத்தின் அடிப்படையில், 2017-18ம் ஆண்டில் மாநில ஆயத்தீர்வைகளின் மூலம் வரவுகள் 6,903 கோடி ரூபாயாக இருக்கும்" என்று தெரிவித்தார். இது டாஸ்மாக் வருமானத்தின் சரிவைக் காட்டுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் ராமுவிடம் கேட்டோம். அவர் கூறுகையில்,"இதுவரை தமிழக அரசு 1000 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளது. இதன்மூலம் அரசுக்கு வழக்கமாக வரும் வருவாயில் ஒன்றும் பெரியதாக இழப்பு இல்லை.100 ரூபாய் வருமானத்தில் 10 ரூபாய் தான் குறைந்துள்ளது. இதனால் அரசு சார்பிலான இலவசத் திட்டங்களுக்குப் பாதிப்பெல்லாம் வராது. ஒரு இடத்தில் இருந்த கடையை மூடிவிடுவதால் அந்தப் பகுதியில் உள்ள மதுப்பிரியர்கள் குடிக்காமல் இருந்துவிடப் போவதில்லை. ஏனெனில் இன்னொரு கடை இருக்கும் பகுதிக்குச் சென்று அவர்கள் வழக்கம் போல இருப்பார்கள். அவ்வளவே. மூடிய கடை மூலம் 2 லட்சம் ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படுகிறது என்று வைத்துக்கொண்டால், அதே ஊரில் இருக்கும் இன்னொரு கடையின் வருமானம் 4 லட்சம் ரூபாயாக உயர்ந்துவிடுகிறது. இதுதான் இப்போதைய நிலை. விற்பனை கடை மாறிவிடுகிறது. ஆனால் வீடுகளுக்கு அருகில் இருக்கும் கடைகளுக்கு ரெகுலராக வருபர்கள், ஒரே நாளில் இரண்டு மூன்று முறை வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. இவர்களால் வந்த வருமானம் மட்டும்தான் குறைந்துள்ளது.

                      டாஸ்மாக்

தமிழக அரசு ஏற்கெனவே 500 கடைகளை மூடியதே முன் ஏற்பாடில்லாத ஒன்றாக இருந்தது. அதே போலவே இப்போதும் அரசு செய்துள்ளது. இந்தக் கடைகளில் பணிக்கு நியமிக்கப்பட்டவர்கள்,வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வந்தவர்கள். அவர்களுக்கு என்று எந்த மாற்று ஏற்பாடுகளும் இல்லை. அரசுத் தரப்பில் செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள இறுதி நாளுக்குள் கடைகளை மூட வேண்டிய அவசரத்தில்தான் அரசு இருக்கிறது, செயல்படுகிறது. உண்மையாகவே மதுவிலக்குக் கொண்டுவரவேண்டும் அல்லது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியது போல செயல்படவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இப்போதுள்ள முதல்வருக்கு இல்லை.

ஏனெனில், மதுபானக் கொள்முதலில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆண்டுக்காண்டு மதுபானக் கொள்முதல் கூடிக்கொண்டே தான் போகிறது. இதனால் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றெல்லாம் நினைத்துவிடமுடியாது" என்றார்.

- சி.தேவராஜன் 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close