Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோர்ட்டுக்கு வந்த வாட்ஸ் அப் ஸ்மைலி விவகாரம்..!

தூத்துக்குடி பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு, அலுவல் ரீதியான பணிகள் குறித்துப் பேச வாட்ஸ்அப் குரூப் ஒன்று உள்ளது. இந்நிலையில், அந்த வாட்ஸ்அப் குரூப்பில், விஜயலட்சுமி என்ற அதிகாரி வாடிக்கையாளர் குறைதீர்ப்புக் கூட்டத்தில் வாடிக்கையாளர் கூறிய குறை வீடியோ ஒன்றை போட்டார். இதற்கு சக ஊழியர்கள் ஸ்மைலியை ரிப்ளை செய்தனர்.

Smiley

இதையடுத்து அந்த ஸ்மைலி தன்னை காயப்படுத்துவதாகவும், அவமானப்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும் கூறி, 49 பிஎஸ்என்எல் ஊழியர்கள் மீது காவல்நிலையத்தில், விஜயலட்சுமி புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

இதைத்தொடர்ந்து, விஜயலட்சுமி புகாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிஎஸ்என்எல் ஊழியர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்குப்பதிவின் மீது விசாரணை நடத்த தடை விதித்துள்ளது.

முக்கியமாக, சமூகவலைதளத்தில், அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. இது ஒரு குற்றமில்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close