Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பல்லடம் காட்டன் ஆலையில் பற்றியெரிந்த பிளாஸ்டிக் கழிவுகள்!

பல்லடம் சுலோச்சனா காட்டன் ஆலையில், ஒரு பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு நூல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. காலியான பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்கள், ஒன் - யூஸ் குவளைகள் போன்றவற்றை இயந்திரத்தைக் கொண்டு அரைத்து, அதிலிருந்து நூல் தயாரிக்கின்றனர். 


அதற்காக இந்த தனியார் ஆலைக்குச் சொந்தமான பகுதிக்குள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பிளாஸ்டிக் சாமான்கள் அனைத்தையும் கொட்டி வைத்திருப்பார்கள்.

Fire accident Palladam cotton mill

இந்நிலையில் இன்று எதிர்பாராத விதமாக இந்த பிளாஸ்டிக் கழிவுகளில் மளமளவென தீ பிடித்திருக்கிறது. இதனால் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் தீயில் கருகியதால், இப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளிக்கத் துவங்கியது.


தீயணைப்புத் துறையினரால் தீ அணைக்கப்பட்டுவிட்டாலும், பிளாஸ்டிக் பொருள்கள் கருகியதால் அதிலிருந்து கரும்புகை தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. இச்சம்பவத்தால் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை. இதன் மூலம் ஏற்பட்டிருக்கும் சேத விபரங்களை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


- தி.ஜெயப்பிரகாஷ்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close