Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஆர்.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடாது' - திருமாவளவன்

thirumavalavan

ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து மற்ற கட்சியினர் அறிவித்துள்ள நிலையில், இரண்டுமுறை கூடி ஆலோசனை நடத்தியபின்னரும் இன்னும் இறுதியான முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறது மக்கள் நலக் கூட்டணி. 

இன்று இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 'ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது. மக்கள் நலக் கூட்டணிக்குள் மாறுபட்ட கருத்துகள் நிலவுவதால் நாளை இறுதி முடிவு எடுக்கப்படும். ஆர்.கே.நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிட விரும்புகிறது' என்றார். 

ஆர்.கே நகர் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் முடிவடைய இன்னும் 6 நாட்களே உள்ளன. தங்களுக்கு ஆதரவு தருமாறு முன்னர் சசிகலா அணி சார்பாக தினகரனும், தி.மு.க சார்பில் அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கேட்டுக் கொண்டனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close