Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சேகர் ரெட்டிக்கு சி.பி.ஐ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்!

சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சென்னை சி.பி.ஐ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

Shekar reddy

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமானவரித்துறை கடந்த ஆண்டு நடத்திய சோதனையில் பல கோடி மதிப்பிலான பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ போலீஸ் மற்றும் அமலாக்கத்துறையினர் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள், ஜாமீன் கோரி சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதில் ரத்தினம் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டது.

இதற்கிடையே, சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு மீண்டும் சி.பி.ஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். முக்கியமாக, அந்த மனுவில் தாங்கள் கைது செய்யப்பட்டு 88 நாள்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.

இதையடுத்து சி.பி.ஐ நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அதன்படி, அந்த மூன்று பேரும் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும், தினமும் சி.பி.ஐ  அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close